Prashanth 2nd Marriage: கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக ஜொலித்த டாப் ஸ்டார் பிரசாந்த், இப்பொழுது இருக்கும் விஜய் அஜித்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் வெற்றி படங்களை கொடுத்து இளசுகுகளின் மனதை கொள்ளையடித்தார். ஆனால் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் கல்யாண வாழ்க்கை அவருடைய சினிமாவின் கேரியரை புரட்டி போட்டு விட்டது.
அதாவது 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை பிரசாந்தின் அப்பா திருமணம் பண்ணி வைத்தார். ஆனால் திருமணம் ஆன 45 நாட்களிலேயே பிரசாந்த் மனைவி கிரகலட்சுமி ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து கல்யாணமானவர் என்பது தெரிய வந்துவிட்டது. இந்த விஷயத்தை மறைத்து கல்யாணம் பண்ணி இருந்ததால் பிரசாந்த், கிரகலட்சுமி விட்டு பிரிந்து விடலாம் என முடிவெடுத்தார்.
45 நாட்களிலேயே கல்யாண வாழ்க்கையை முறித்துக் கொண்ட பிரசாந்த்
ஆனால் தன் மீது இருக்கும் தவறை மறைக்கும் விதமாக கிரகலட்சுமி, பிரசாந்த் குடும்பத்தில் இருப்பவர்கள் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வெளியே அனுப்பி விட்டார்கள் என்று புகார் கொடுத்து விட்டார். அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு மேலாக கோர்ட் கேஸ் என்று பிரசாந்தின் குடும்பம் ஒட்டுமொத்தமாக அலைந்து உள்ளார்கள்.
இதனால் மன உளைச்சலான பிரசாந்த் சினிமாவில் நடிக்க முடியாமல் துவண்டு போய்விட்டார். அத்துடன் பல வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் மறுபடியும் கம்பேக் கொடுக்கும் விதமாக அந்தகன் படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்த படமும் சரியான நேரத்தில் ரிலீஸ் பண்ண முடியாமல் கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு மேல் இழுவையாக இழுத்து அடித்தது.
இந்த சூழலில் தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிய கோட் படத்தில் பிரசாந்துக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரசாந்த் கோட் படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களின் மனதில் குடி புகுந்து விட்டார். சூட்டோடு சூட்டாக இந்த நேரத்தில் அந்தகன் படத்தையும் ரிலீஸ் பண்ணி விட்டால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் சில தினங்களுக்கு முன் படத்தை ரிலீஸ் பண்ணினார்கள்.
அந்த வகையில் எதிர்பார்த்தபடி அந்தகன் படம் வெற்றி படமாக பிரசாந்த் மற்றும் தியாகராஜனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து விட்டது. இந்த நிலையில் அந்தகன் சக்சஸ் வீட்டில் கலந்து கொண்ட பிரசாந்த், தியாகராஜன், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா மற்றும் கே எஸ் ரவிக்குமார் அனைவரும் படத்தைப் பற்றி சில கருத்துக்களை கூறினார்கள். அப்பொழுது கேஎஸ் ரவிக்குமார், மேடையில் வைத்து பிரசாந்த் கல்யாணம் எப்பொழுது என்று தியாகராஜனிடம் கேள்வியை முன் வைத்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக தியாகராஜன், கடந்த சில வருடங்களாக எனக்கும் என் மனைவிக்கும் மிகப்பெரிய கவலை என்றால் அது என் மகன் பிரசாந்தின் திருமணம் பற்றி தான். அதனால் எப்படியாவது அவருக்கு கல்யாண வாழ்க்கை மூலம் நிம்மதியான ஒரு சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று பொண்ணு பார்த்துக் கொண்டு வருகிறோம். இப்பொழுது அந்தகன் படமும் எதிர்பார்த்தபடி வெற்றி அடைந்ததால் இனி எங்களுடைய அடுத்த கட்ட வேலை பிரசாந்துக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பது தான்.
அதனால் கூடிய விரைவில் பிரசாந்த் குணத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல பெண்ணை தேடிப் பிடித்து கட்டி வைப்போம். அப்பொழுதுதான் எங்களுக்கு ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்ததாக இருக்கும் என்று கண்கலங்கி ஒரு தகப்பனனின் மனக்கவலையை சொல்லும் விதமாக தியாகராஜன் அனைவரது முன்னாடியும் ஆதங்கத்தை கொட்டிவிட்டார். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மறு திருமணத்திற்கு தயாரான பிரசாந்துக்கு இனி எடுத்து வைக்கிற ஒவ்வொரு விஷயமும் நல்லதாகவே நடக்கும்.
பல வருடங்கள் கழித்து வந்த பிரசாந்துக்கு கிடைத்த வெற்றி
- வசூலில் மாஸ் காட்டும் பிரசாந்த்
- அந்தகன் படத்தால் 3 பேருக்கு அடித்த ஜாக்பாட்
- டாப் ஸ்டாருக்கு கம்பேக் கொடுத்ததா அந்தகன்