சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஷங்கர், ராஜமௌலி எல்லாம் சும்மா.. பிரம்மாண்டம்னா அவர்தான், பிரசாந்த் அதிரடி

பிரமாண்ட படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷங்கர் மற்றும் ராஜமௌலி. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், ஜீன்ஸ், எந்திரன், ஐ, 2.0 போன்ற பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது.

அதேபோல் ராஜமௌலியும் பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற பிரம்மாண்டப் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரசாந்த் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் என பலர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் 90 களிலேயே பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஆர்கே செல்வமணி தான் என பிரசாந்த் கூறினார். ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் மூன்று படங்களில் நடித்துள்ளார்.

பிரசாந்துக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த செம்பருத்தி படத்தை ஆர்கே செல்வமணி தான் இயக்கி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக பிரசாந்தை வைத்து 1994இல் கண்மணி என்ற படத்தை ஆர்கே செல்வமணி இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

மீண்டும் 2015 ஆம் ஆண்டு புலன்விசாரணை 2 படத்தின் மூலம் பிரசாந்த், ஆர்கே செல்வமணி இணைந்தனர். இப்படமும் தோல்விப் படமாகவே அமைந்தது. இந்நிலையில் தற்போது நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்கே செல்வமணியும் பங்கு பெற்று இருந்தார். அப்போதைய காலகட்டத்திலேயே ஆர்கே செல்வமணி ஒரு பாடலுக்கு 500 நடன கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக எடுத்திருந்தார்.

மேலும் சினிமாவில் இப்படி எடுக்க முடியுமா என்பதை சாதித்து காட்டியவர் ஆர்கே செல்வமணி என பிரசாந்த் புகழ்ந்து பேசினார். மேலும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என பிரசாந்த் கூறினார். இதனால் பிரசாந்த், ஷங்கர் மற்றும் ராஜமௌலியை தான் சூசகமாக இப்படி குறிப்பிடுகிறார் என்று கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால் பிரசாந்தின் வெற்றிப்படமான ஜீன்ஸ் படத்தை ஷங்கர் தான் இயக்கி இருந்தார்.

Trending News