ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஹீரோக்களின் படங்கள் வெளியாகுவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் இந்த வருடம் ஒட்டு மொத்த திரை உலகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்த நாளில் வெளியாக உள்ளது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்பொழுது இரண்டு படங்களுமே ஒரே நாளில் ஜனவரி 11 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் உடன் மஞ்சுவாரியர் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ள படம் துணிவு. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி அதில் அஜித்தின் தோற்றம் வசனம் நடனம் என அனைத்திலும் மாசாக தெறிக்க விட்டிருப்பார். வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் விஜய் உடன் ரஷ்மிகா மந்தனா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.குடும்பப்பாங்கான கதை அம்சத்தை கொண்டு இப்படமானது அமைந்துள்ளது.
Also Read: வாரிசு ட்ரெய்லரில் மறைக்கப்பட்ட 5 சீக்ரெட் கதாபாத்திரங்கள்.. ரகசியமாக வைத்திருக்கும் பட குழு
வாடி வாசலில் இரண்டு காளைகள் மோதிக் கொள்வது போல் வாரிசும் துணிவும் ஒரே நாளில் மோதிக்கொள்ள இருக்கின்றனர். அதுவும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எந்த படம் வெற்றி பெறும் என்று ரசிகர்களின் கணிப்பில் ஓரளவு தெரிந்துவிட்டது. திரையரங்கு உரிமையாளர்கள் தலையில் துண்டை போட்டு உட்கார்ந்து விடுவோமோ என்ற பயத்தில் போட்ட முதலீட்டையாவது எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இருந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க படங்களின் தயாரிப்பாளர்களான தில்ராஜ் மற்றும் போனி கபூர் இருவரும் படத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார்களாம். இதனால்தான் செலவு செய்த முதலீட்டையாவது எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாரிசை நள்ளிரவு காட்சியாக துணிவு படத்திற்கு முன்பே வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே மல்லுக்கட்டி கொண்டிருந்த நிலையில் தற்பொழுது துணிவிற்கு சாதகமாகவும் வாரிசீக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது.
Also Read: துணிவை தாண்டிய சஸ்பென்ஸ் வாரிசு படத்தில் உள்ளது.. எதிர்பார்ப்பை அதிகரித்த இயக்குனர்
தற்பொழுது அதற்கான சிறப்பு காட்சி நேரம் ஆனது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதில் இரண்டு படங்களுக்குமே வெளியாகும் நேரம் ஆனது மாறுபட்டுள்ளது. இதில் தளபதியின் வாரிசை பின்னுக்குத் தள்ளி தல அஜித்தின் துணிவானது லீடிங்கில் உள்ளது. இதிலிருந்தே எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று மாபெரும் வசூலைக் குவிக்கும் என்று சென்சார் பேட்டையில் பேச்சுப் பொருளாக மாறி உள்ளது.
திரையரங்குகளில் மாசாக களம் இறங்க இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்களின் ரிலீஸ் நேரம் ஆனது வெளியாகி உள்ளது. ஜனவரி 11 இல் அஜித்தின் துணிவானது அதிகாலை 1 மணிக்கும் விஜயின் வாரிசானது அதிகாலை 4 மணிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த தகவல் ஆனது இணையத்தில் வெளியாகி பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
Also Read: தாறுமாறாக எகிறிய வாரிசு-வின் டிக்கெட் விலை.. ஒரு பாப்கார்ன், ஒரு கொக்ககோலா ஃப்ரீ என விளம்பரம் வேற