வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து கர்ப்பமான பெண்.. வெங்கடேஷ் பட் கொடுத்த ஷாக் தகவல்

விஜய் டிவியில் புதுவிதமான பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எப்போதும் டி ஆர் பி இல் முதலிடம் இருப்பது குத் வித் கோமாளி நிகழ்ச்சி. தளபதி விஜய்க்கு கூட ஃபேவரட் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தானாம்.

தற்போது இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் தர்ஷன், ரோஷினி, அம்மு அபிராமி, வித்யுலேகா, க்ரேஸ் கருணாஸ் மற்றும் பலர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா, குரேஷி, சுனிதா, பரத் என பலர் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் சமையலை தாண்டி காமெடி தான் அதிகமாக இருக்கும். அண்மையில் இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் கூறிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக குழந்தை இல்லாத ஒருவருக்கு இந்நிகழ்ச்சியை பார்த்த பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாம். அதாவது சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது அங்கு ஒரு பெண் எனக்கும் சில வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்த பின்பு என்னுடைய ஸ்டிரஸ் குறைந்த தற்போது என் கையில் குழந்தை உள்ளது. நீங்களும் அந்த நிகழ்ச்சியை பாருங்கள் என்று அறிவுரை சொன்ன பிறகு அந்தப் பெண்ணும் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்த பின்பு கருவுற்று உள்ளார்.

இந்த விஷயத்தை வெங்கடேஷ் பட் கூற வித்யூலேகாவுக்கு புல்லரித்து போகிறது. தொழில் ரீதியான பிரச்சினை, குடும்ப பிரச்சனை என எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சிறிது நேரம் பார்த்தாலே அவர்களது மனக்கவலை குறைகிறதாம். ஆனால் இதெல்லாம் பார்த்து தற்போது வெங்கடேஷ் பட் அவர்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Trending News