ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

உடம்பு நல்லா தானே இருக்கு, உழைச்சி சாப்பிடலாமே!. பிரபல நடிகையை வெளுத்து விட்ட பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakanth: இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். இது மக்கள் திலகம் எம்ஜிஆருக்காக எழுதப்பட்ட வரிகள். அது நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தியது அவருக்கு அடுத்து கேப்டன் விஜயகாந்த்திற்கு தான்.

விஜயகாந்தை பொறுத்தமட்டிலும் அவர் மறைந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்று வரை அவரைப் பற்றி யாராவது ஒருவர் எங்கோ ஒரு மூலையில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொடுத்து சிவந்த கரங்கள் என்று கேள்விப்பட்டிருப்போம்.

அதற்கு உண்மையான உதாரணம் கேப்டன் தான். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு கேப்டன் முடியாது என்று சொன்ன நாள் கிடையாது. அவர் உதவி செய்த எத்தனையோ பெயர்கள் அவருடைய அரசியல் வீழ்ச்சியின் போது அவருடன் நிற்கவில்லை என்பது அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கோவம் தான்.

பிரேமலதா விஜயகாந்த் போல் அவ்வளவு எளிதில் கரையக்கூடியவர் கிடையாது. ஒரு விஷயத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கக்கூடியவர். அவரிடம் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் சிக்கி இருக்கிறார். செந்தில், கவுண்டமணி காமெடிகளின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை வாசுகி.

வெளுத்து விட்ட பிரேமலதா விஜயகாந்த்

டீச்சர் போல் நடித்து கவுண்டமணியை ஏமாற்றி கடைசியில் அவர் பிச்சை எடுப்பவர் என்று தெரிந்து கவுண்டமணி கொந்தளிக்கும் காமெடியை இன்று வரை மறக்க முடியாது. வாசுகி சினிமாவை தாண்டி அரசியல் மேடை பலவற்றிலும் தன் முகத்தை காட்டி இருக்கிறார்.

ஒரு கட்சியின் சார்பாக பேச வேண்டும் என காசு வாங்கி விட்டாள் எதிர் தரப்பில் இருப்பவர்களை ரொம்பவும் தரைமட்டமாக பேசி விடுவார். கடந்த சில மாதங்களுக்கு முன் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை பற்றி இவர் பேசிய வீடியோக்கள் பெரிய அளவில் வைரலானது.

விஜயகாந்த் இறந்தபோது தான் சொந்த ஊரிலிருந்து 3000 ரூபாய் கடன் வாங்கி வந்து அவருடைய இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டதாகவும், ரொம்பவும் கதறி அழுததாகவும் சொல்லி இருக்கிறார் வாசுகி. அதன் பின்னர் வாசுகி விஜயகாந்த் வீட்டிற்கும் சென்றிருக்கிறார்.

அங்கு விஜயகாந்தின் மகன்கள் மற்றும் மனைவி அவரை நல்ல முறையில் உபசரித்திருக்கிறார்கள். அதன் பின்னர் பிரேமலதா வாசுகி இடம் உடம்பு நல்லா பிட்டா தானே வச்சிருக்கீங்க, எங்கேயாச்சும் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம்.

தேவையில்லாமல் நிறைய அரசியல் தலைவர்களை பற்றி நீங்கள் பேசியதால்தான் உங்களுக்கு இப்போது இந்த நிலைமை என கடிந்து கொண்டதாக வாசுகி சொல்லி இருக்கிறார்.

Trending News