வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வழக்கம்போல வேலையை காட்டிய பிரேம்ஜி.. வெளுத்து விட்ட கல்யாண பொண்ணு, காரணம் இதுதான்

Actor Premji: நான் ஒரு முரட்டு சிங்கிள் என கெத்தாக சுற்றி வந்த பிரேம்ஜி இந்த வருடம் திருமணம் செய்ய தயாராகி விட்டார். புத்தாண்டு தினத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே அவருக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்தாலும் யார் கல்யாண பொண்ணு என்ற கேள்வி தான் அதிகமாக எழுந்தது.

அதைத்தொடர்ந்து இவர் தான் பிரேம்ஜியின் வருங்கால மனைவி என ஒரு பெண்ணின் போட்டோவும் மீடியாவில் வைரலானது. ஆனால் உண்மையில் அப்பெண் பிரேம்ஜியின் தோழியாம். இது தெரியாமல் பல பேர் அந்த போட்டோவை ஷேர் செய்து வந்தன்ர்.

இதனால் உண்மையான கல்யாண பெண் இப்போது கடும் கோபத்தில் இருக்கிறாராம். அதைத்தொடர்ந்து அவர் பிரேம்ஜியை லெப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்கி இருக்கிறார். இப்படி ஒரு போட்டோ வலம் வரும்போது நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள். ஒன்று அதற்கு மறுப்பு தெரிவியுங்கள்.

Also read: புத்தாண்டில் திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரேம்ஜி.. பொண்ணு யாரு தெரியுமா?.

இல்லையென்றால் என்னோட போட்டோவை வெளியிடுங்கள் என பொரிந்து தள்ளி விட்டாராம். இதனால் பிரேம்ஜி தற்போது செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் பிரேம்ஜி இந்த போட்டோ விஷயத்தையும் வழக்கம் போல டீலில் விட்டிருக்கிறார்.

ஆனால் கல்யாணப் பெண் தற்போது போர்க்கொடி தூக்கிய நிலையில் விரைவில் அவருடைய போட்டோ வெளியாகும் என்கிறது திரையுலக வட்டாரம். ஆனால் தற்போது பவதாரணியின் மறைவு பிரேம்ஜி உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவருடைய திருமணம் தள்ளிப் போகவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also read: 20 வயது கம்மியான பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் பிரேம்ஜி.. வருங்கால மனைவியின் வைரல் புகைப்படம்

Trending News