Priya Atlee at Ambani wedding: இயக்குனர் அட்லி சும்மா இருந்தாலும் இணையவாசிகள் அவரை வம்புக்கு இழுக்காமல் இருக்க மாட்டார்கள். அவரே தேடி வந்து கண்டெண்ட் கொடுத்தால் சும்மா இருப்பார்களா, வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். மதுரையில் பிறந்த அட்லி இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக இணைந்து, இயக்குனர் ஆகி தொடர்ந்து மூன்று படங்கள் விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜமான் படத்தை இயக்கிய பிறகு இந்தி சினிமாவின் முக்கிய நபர் ஆனார். இதனால் மும்பையில் நடக்கும் பல பெரிய விழாக்களில் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்.
அப்படி அவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்வு தான் அம்பானி வீட்டு கல்யாணம். உலகத்தில் இருக்கும் பல நட்சத்திரங்களும் ஆனந்த அம்பானி ராதிகா மெர்சன்ட் கல்யாணத்திற்காக மும்பை வந்தனர். மொத்தமாக பார்ப்பதற்கு அவ்வளவு உற்சாகமாக இருந்தது.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட செலிபிரிட்டிகளின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வந்து குவிந்தன. அப்படித்தான் அட்லி அவருடைய மனைவி பிரியா உடன் இணைந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானது.
இதெல்லாம் தேவையா பாஸ்?
ஆனால் அதில் இருந்து தான் பஞ்சாயத்து வந்திருக்கிறது. அட்லி மனைவி பிரியாவின் மாடன் உடைகள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக இருக்கும். ஆனால் இந்த முறை அது எல்லை மீறி விட்டது. ஆனந்த அம்பானி கல்யாணத்திற்கு வந்த பிரியா அட்லி லெஹங்கா அணிந்திருந்தார்.
வலைத் துணியில் தயாரிக்கப்பட்டிருந்த அவர் பிளவுஸின் பின்பக்கத்தில் அம்பானி படை (Ambani Brigade) என அச்சிடப்பட்டிருந்தது. போதாத குறைக்கு அட்லி அதை ஸ்டைலாக காட்டி போஸ் வேற கொடுத்தார். அம்பானி காசு கொடுத்தா பொண்டாட்டி பிளவுஸில் அவர் பெயரை எழுதுவதால் என முகம் சுளிக்கும் அளவுக்கு தற்போது நெகட்டிவ் கமெண்ட்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இந்த தமிழ் சினிமாக்காரர்கள் எல்லாம் படத்தில் தான் வடநாட்டு தொழிலதிபர்களை பகைத்து கொள்வது போல் நடிக்கிறார்கள். உண்மை இல்லை அவர்களுடைய காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என விமர்சனங்கள் எழுதியிருக்கிறது. சூர்யா ஜோதிகா இந்த திருமணத்தில் கலந்து கொண்டது, ரஜினிகாந்த் ஆடிய டான்ஸ் என அத்தனையுமே நெகட்டிவ் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
![](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/07/maxresdefault-1024x576.jpg)
விமர்சனத்திற்கு உள்ளான பிரியா அட்லியின் ஆடை வடிவமைப்பு