திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

மன்மத நடிகருக்கு வலை விரித்த பிரியா பவானி சங்கர்.. ரகசியமாய் வந்த ஃபோன் கால்

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதிஷ் நடிப்பில் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. மலையாளத்தில் வெளியான “அடி கப்யாரே கூட்டமணி” என்னும் படத்தின் ரீமேக்கான இது வருகிற 28ஆம் தேதி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய நடிகை பிரியா பவானி சங்கர் இயக்குனர் சுமந்த் இந்த கதையை என்னிடம் கூறிய உடன் நான் ஒப்புக் கொண்டேன். மேலும் இதில் கதாநாயகனாக யார் நடிக்க இருக்கிறார் என நான் கேட்ட போது, யாரையும் இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் அசோக் செல்வன் நடித்தால் நன்றாக இருக்கும் என சுமந்த் கூறினார், தயாரிப்பாளர் ரவீந்திரன் சாரும் அதனையே விரும்பினர்.

அசோக் என்னுடைய நண்பர் என்பதால் நான் அவரை இரகசியமாய் போனில் அழைத்து இந்த படம் குறித்து கூறினேன். கதை கேட்ட பின்னர் அசோக்கிற்கும் இது பிடித்து போக அவர் சம்மதித்தார். ஆனால் அவர் பிஸியாக படங்கள் நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சினை, ஆனால் நட்பிற்காக அவை அனைத்துயும் சரி செய்து அசோக் செல்வன் படத்தை முடித்து கொடுத்துள்ளார் என்றார் பிரியா பவானி சங்கர்.

இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் அசோக் செல்வன் தன்னுடன் நடித்த பிரியா பவானி சங்கர், சதிஷ், முனிஸ்காந்த் ஆகியோரை பாராட்டி பேசினார். மேலும் என்னுடைய முந்தைய படங்களான ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை படங்களின் வெற்றிக்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இந்த படத்தையும் அனைவரும் தியேட்டரில் வந்து பார்த்து வெற்றியடைய செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

கடைசியாக பிரியா பவானி நடிப்பில் ஃப்ளட் மணி என்ற படம் வெளியாகி இருந்தது. அவர் தற்போது பத்து தல, திருச்சிற்றம்பலம், யானை போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள் படங்களின் நல்ல வரவேற்பிற்கு பிறகு அசோக் செல்வன் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவருடைய நடிப்பில் நித்தம் ஒரு வானம் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரித்து, போபோ சஷி என்பவர் இசையமைக்க, ப்ரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2016இல் சதுரம் 2 என்ற படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News