செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஷாலுடன் நடித்ததால் பிரியா பவானிக்கு ஏற்பட்ட சங்கடம்.. கண்டுக்காமல் அலட்சியம் பண்ணிய ஹரி

Vishal and Priya Bavani Sankar: விஷால் பொருத்தவரை வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாக தான் பல விஷயங்களை செய்து வருகிறார். தான் சும்மா இருந்தாலும் தன் வாய் சும்மா இருக்காது என்று சொல்வதற்கு ஏற்ப தேவையில்லாத வீண் பேச்சால் பல சர்ச்சைகளில் சிக்கி கேலியும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி இவருடைய படங்களும் வியாபாரமாகாமல் தொடர் தோல்வியை அடைந்து வருகிறது.

ஏதோ எஸ்ஜே சூர்யாவுடன் கூட்டணி வைத்ததால் மார்க் ஆண்டனி படம் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக ஹரி இயக்கத்தில் சிங்கிள் ஹீரோவாக ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது.

இந்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ரத்னம் படத்தின் மொத்த டீமும் அல்லோளப்பட்டு வருகிறார்கள். அதற்காக விஷால் மற்றும் ஹரி இருவரும் சேர்ந்து படத்தின் ப்ரோமோஷன்களை செய்து வருகிறார்கள். ஆனால் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயின் ஆக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரை மட்டும் ஒதுக்கி விட்டார்கள்.

கையில் காசும் லீவையும் கொடுத்த ஹரி

அதாவது படத்தில் நடிப்பதற்கும் பிரமோஷனுக்கும் சேர்த்து தான் அவருக்கு 80 லட்சம் வரை சம்பளமாக கொடுத்து இருக்கிறார்கள். அத்துடன் ரெண்டு வாரம் பட பிரமோஷன் நடக்கும் நீங்கள் வரவேண்டும் என்று ஹரி ஏற்கனவே கூறி இருந்திருக்கிறார். ஆனால் இப்போ வரை பிரியா பவானியை கூப்பிடாமல் விஷால் மற்றும் ஹரி மட்டுமே ப்ரோமோஷன் பண்ணிக்கொண்டு வருகிறார்கள்.

அதற்கு காரணம் விஷால் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி அவருடைய பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் இவருடன் சேர்ந்து ப்ரியா பவானி பொது இடங்களுக்கு வந்தால் இவருடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்பதால் தான். அதனால் தான் ஹரியும் பிரியா பவானியை கண்டு கொள்ளாமல் கையில் காசு கொடுத்து லீவையும் கொடுத்து வீட்டிலேயே உட்கார வைத்து விட்டார். ஆனால் பிரியா பவானிக்கு இது ஒரு மிகப்பெரிய சங்கடமாக இருக்கிறதாம்.

Trending News