புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நாடக காதல் பற்றி பேசியவருகுள்ள இப்படி ஒரு காதலா? திருமண வாழ்க்கையில் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களில் பிரபல நடிகர் ரஞ்சித்தும் ஒருவர். இந்த வாரத்தில் இவர் அல்லது ரவீந்தர் கண்டிப்பாக எலிமினேட் ஆவார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. ஆரம்பத்தில் இருந்து வள்ளல் போல நடித்து கொண்டிருக்கிறார் என்ற விமர்சனமும் இவர் மீது வைக்க படுகிறது.

ஆனால் அவர் குழந்தை மாதிரி என்று அவர் மனைவி கூறியிருக்கிறார். இவரின் காதல் கதை கேட்டோம் என்றால், நாடக காதல் பற்றி பேசியவருக்குள் இப்படி ஒரு காதலா என்று ஆச்சரிய படுவோம். ஆனால் என்ன.. ரஞ்சித் மற்றும் அவர் மனைவி பிரியா ராமன் காதல் விளையாட்டில், ரஞ்சித்தின் இரண்டாவது மனைவி தான் ஜோக்கர் ஆகி விட்டார்.

காதலும் விவாகரத்தும்

90களில் வெளியான ‘மறுமலர்ச்சி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி பல்வேறு ஹிட் படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் ரஞ்சித். நடிகரை தாண்டி வெற்றிகரமாக இயக்குனராகவும் வலம்வந்த ரஞ்சித் ‘‘பீஷ்மர்’’ என்கிற படத்தை இயக்கினார்.

நடிகை பிரியா ராமனை காதலித்து ரஞ்சித் திருமணம் செய்தார். நடிகை பிரியா ராமன், ‘நேசம் புதுசு’ என்கிற படத்தில் ரஞ்சித்துடன் ஜோடியாக நடித்தார். அப்போதே, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 15 ஆண்டுகால இல்லற வாழ்க்கைக்கு பின்னர், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழ, 2014ல் முறையாக விவாகரத்துபெற்றனர்.

வீம்புக்கென்று இரண்டாம் திருமணம்

இருவரும் பிரிந்த அதே ஆண்டில் சீரியல் நடிகை ராகசுதாவை ரஞ்சித் திருமணம் செய்தார். திருமணம் ஆன ஒரே ஆண்டில் ரஞ்சித் – ராகசுதா இடையே பிரிவு உண்டாக, இருவரும் பிரிந்தனர். வீம்புக்கென்று உடனே திருமணம் செய்தது போல தான் தெரிகிறது.

ஆனால் கதையில் புது ட்விஸ்ட்டாக, இந்த பிரிவு நடந்த ஏழு ஆண்டுகளுக்கு பின் ரஞ்சித் – பிரியா ராமன் இருவரும் மீண்டும் இணைந்தனர். விவாகரத்தை திரும்பப்பெற்ற இருவரும், 7 ஆண்டுகள் கழித்து, மீண்டும் தங்கள் திருமண நாளில் ஒன்றாக இணைந்ததாக போட்டோ வெளியிட்டு அறிவித்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இப்போது ஒன்றாக இருக்கிறாரா இல்லை பிரிந்து விட்டார்களா என்ற கேள்வி வர, “நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம். எங்களில் யாரேனும் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் எங்களை நம்பி ஒரு இளம் ஜோடி இருப்பதால் அவர் ஸ்தானத்தில் நான் அவர்களை தற்போது பாத்து கொள்கிறேன்.

எனக்கு பதிலாக தான் ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் ஒரு குழந்தை போல. இளகிய மனம் கொண்டவர். பிக் பாஸ்-ல் அவர் நடிக்கவில்லை. இது தான் அவர் உண்மையான குணம்” என்று கூறியுள்ளார்.

Trending News