சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிரியங்கா, மணிமேகலை சொத்து மதிப்பு.. விஜய் டிவிக்கு போனாலே கோடீஸ்வரிதான்

சமீபத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக உள்ள மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு இணையத்தில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் வேலை பார்க்கும் தொகுப்பாளினிகள் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் பல வருடங்களாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. எந்த ஒரு நிகழ்ச்சியையும் கலகலப்புடன் எடுத்துச் செல்வதில் வல்லவர். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளை பிரியங்கா தான் தொகுத்து வழங்குவார்.

அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா உடன் இணைந்து பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பிரியங்கா பங்கு பெற்றார். ஒரு பக்கம் இவருக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் அவரது ரசிகர்கள் தற்போது வரை பிரியங்காவை விட்டுக்கொடுக்காமல் உள்ளனர்.

அதேபோல் சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர் மணிமேகலை. கடந்த சில வருடங்களாக தற்போது விஜய் டிவியில் வேலை பார்த்து வருகிறார். அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை வேற லெவலுக்கு பிரபலமாக்கியது. கோமாளியாக இவர் செய்யும் சேட்டைகள் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

இந்நிலையில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருமே யூடியூப் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்கள். அன்றாடம் தங்களது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை வீடியோக்கள் மூலம் யூட்யூபில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்களும் ட்ரெண்டிங்கில் இருந்த வருகிறது.

தற்போது பிரியங்காவின் சொத்து மதிப்பு 1.16 மில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 9 கோடி சொத்துக்களை பிரியங்கா வைத்துள்ளார். அதேபோல் மணிமேகலையின் சொத்து மதிப்பு 1 மில்லியன் டாலர் முதல் 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்புபடி 7 கோடியிலிருந்து 35 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

Trending News