Priyanka : விஜய் டிவியில் பிரபல தொடரான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிவிட்டார். அதோடு இந்நிகழ்ச்சியில் இருந்து விலக காரணத்தையும் தனது யூடியூபில் வீடியோ மூலம் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். அதுவும் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்வதற்காக பிரியங்காவின் கேரக்டரை மோசமாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். மேலும் விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்தனர்.
அதற்கும் மணிமேகலை ஒரு வீடியோ போட்டு இருந்தார். இந்த சூழலில் விஜய் டிவி பிரபலம் வனிதா விஜயகுமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசி இருக்கிறார். அதாவது மணிமேகலை செய்தது மிகவும் தவறான செயல். நானும் இது போன்று நிறைய நிகழ்ச்சி இருந்து வெளியேறி இருக்கிறேன்.
மணிமேகலையால் கதறி அழுத பிரியங்கா
அதற்காக வீடியோ போடுவது ரொம்ப தப்பு. மேலும் ஒருவரின் கேரக்டரை பற்றி தப்பாக சொல்லும் போது அதையும் என்கரேஜ் பண்ணி வீடியோ போட்டு செம்பால் அடிக்கிறது தான் மிகவும் தவறு. செம்பால அடிக்கிறது எல்லாம் எங்க அப்பா தான் பண்ணனும்.
மேலும் மணிமேகலை இடம் தற்போது வரை தான் பேசவில்லை, பிரியங்காவிடம் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினேன் என்று வனிதா கூறி இருக்கிறார். எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் பிரியங்கா தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறாராம்.
அதோடு பிரியங்காவின் குடும்பமும் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளது. இந்த விஷயத்தை இவ்வளவு பெரிய பூதாகரமாக மாற்ற தேவையில்லை. மணிமேகலை யோசித்து இதை செய்திருக்கலாம் என்று வனிதா விஜயகுமார் இந்த போட்டியில் கூறியிருக்கிறார்.
பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்யும் பிரபலங்கள்
- பிரியங்கா vs மணிமேகலை, இதெல்லாம் தானா அடங்கிடும்
- விஜய் டிவியின் 5 முக்கிய தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம்
- ஆண்டவர் இல்லாத பிக்பாஸ் 8, துண்டு போட்ட பிரியங்கா