அஜித்தை பற்றி தப்பா டமாரம் அடிக்கும் கூட்டம்.. ஒதுங்கிக் கொள்ளச் சொல்லும் தயாரிப்பாளர்

Producer chitra lakshmanan supports ajith for anthanan controversy: தோற்றாலும் ஜெயித்தாலும் தன்னோட வழியில யாரையும் புண்படுத்தாமல் சென்று கொண்டிருக்கும் அஜித்தை, வீணாக வம்புக்கு இழுத்து திட்டம் போட்டு வேலை செய்கிறது ஒரு கூட்டம். பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவரின் கொள்கைகளை பிரித்து மேய்வது என்பது தகாத ஒன்று. அதை தகுந்த முறையில் அரங்கேற்றி வருகின்றனர் அஜித்தின் நல விரும்பிகள்.

கலை, கொள்கை இரண்டையும் ஒன்றாக கலக்காமல், தான் கொண்ட கொள்கையில் இருந்து தவறாது, படத்தில் மட்டுமே நடித்து, நிஜத்தில் வெடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். இப்படி இருக்கும் அஜித்தை விஜயகாந்த் மரணத்திற்கு வரல, நண்பரின் மரணத்திற்கு போகிறார் என்று தவறாக பேசி இருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் முருகதாஸை அஜித் உருவ கேலி செய்ததாக  கொளுத்தி போட்டு உள்ளனர். முருகதாஸிற்கு முதல் வாய்ப்பு கொடுத்தவரே அஜித் தான் என்பதை மறந்தனர் போலும். இன்னமும் ஏ ஆர் முருகதாஸ், நான் அஜித்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன் என்று சொல்லி வருகிறார். அஜித்தின் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் அவர் இன்னமும் வெயிட் பண்ணி இருப்பார் இதை புரிந்து கொள்ள முடியாதா?

Also read: இந்த ஒரு பயத்தில்தான் கமலுடன் இணையவில்லை.. புல்லரிக்க வைத்த ஏ ஆர் முருகதாஸ்

ஏ ஆர் முருகதாஸ் மட்டுமல்லாமல் அஜித்திடம் பணிபுரிந்த இயக்குனர்கள் சரண், ஹச் வினோத், சிறுத்தை சிவா என அனைவரும் திரும்பவும் அவருடன் பணி புரியவே விரும்புகின்றனர்.  இது மட்டுமல்லாமல் இன்றுவரை அத்தனை  பேட்டிகளிலும் அஜித்தை  தான் மனதில் நினைத்ததை விட ஒரு படி அதிகமாகவே நேசிக்கிறேன் என்று நன்றியுடன் இருந்து வருகிறார் எஸ் ஜே சூர்யா.

அஜித் ஒரே கெட்டப்பில் தான் நடித்து வருகிறார் என்றும், தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார், என்பது போலவும் “வாங்க அஜித்தை புறக்கணிப்போம்” என்ற தலைப்பிலேயே அஜித்தின் மீது வெறுப்பை கருக்கி வருகின்றனர் சில பத்திரிக்கையாளர்கள். கேட்டால் மக்கள் மீது இருக்கும் அக்கறையில் தான் இதை கூறுகிறேன் என்று பரிதாபத்துடன் மக்களையும் கூட்டு சேர்த்துக் கொள்கின்றனர்.

“நீங்க என்ன சொன்னாலும் அஜித் ரசிகர்கள் யாரும் தப்பா பேச மாட்டாங்க உங்களுக்குத்தான் கஷ்டம்” என்று பிரபலமான பத்திரிக்கையாளர் ஒருவர்  பதில் கூறியுள்ளார் இது பற்றி பேசிய தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் “எங்கே வரணும், வரக்கூடாது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்”  உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் அடுத்தவரின் கொள்கைகளை ஏன் விமர்சிக்க வேண்டும் என்பது போன்ற காட்டமான பதிலை அளித்துள்ளார்.

Also read: அஜித் இதுக்கு தான் விக்னேஷ் சிவனை நிராகரித்தாரா.? கணவனுக்காக வரிந்து கட்டிய நயன்தாரா