வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

25 ஆண்டுகளுக்கு முன்னரே காப்பாற்றி விட்ட ரஜினி.. பயன்படுத்திக் கொள்ள தெரியாத தயாரிப்பாளர்.!

திரையில் புகழின் உச்சியில் இருக்கக்கூடிய நடிகர்களுள் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தன்னுடன் பணிபுரிபவர்களை வேற்றுமையாக பார்க்காமல் சக தோழர்களாக மட்டுமே பார்த்து வரக்கூடியவர் ஆவார். எந்த சூழ்நிலையிலும் கஷ்டம் என்று வருபவர்களுக்கு கொடை வள்ளலாகவே இருந்து வருகிறார். அதிலும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் தனது நண்பருக்காக பலமுறை கை கொடுத்து உதவியுள்ளார்.

அப்படியாக இவர் நடித்த படங்களில் உதவி இயக்குனர் மற்றும் எக்ஸிக்யூட்டர் ஆக வேலை செய்து வந்தவர் தான் வி ஏ துரை. மேலும் இவர்கள் இருவரும் சினிமா துறையில் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வந்தனர். அந்த சமயத்திலும் கூட வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு அட்வைஸ்களையும் கொடுத்துள்ளார் ரஜினி.

Also Read: கதாநாயகி தான் ஹீரோவே.. அந்த படத்தில் முதல் முதலாக இணைந்த சூப்பர் ஸ்டார், கேப்டன், சத்யராஜ்

அதிலும் 25 வருடங்களுக்கு முன்பே தயாரிப்பாளராக தனது பணிகளை சரியாக செய்து வரும் பொழுதே, சினிமாவை மட்டுமே நம்பி வாழ வேண்டாம் என்று பலமுறை எடுத்துக் கூறியுள்ளார் ரஜினி. ஏனென்றால் சினிமா துறையை பொறுத்தவரையிலும் எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவரை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். அப்படி இல்லை என்றால் ஒரேடியாக காலை வாரி விடும் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் வடபழனி முருகன் கோவிலுக்கு பின்புறம் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தையும் வாங்கி தந்துள்ளார். உங்கள் குடும்பம் ஆனது கஷ்டமான சூழ்நிலையினை எதிர்கொள்ளும் பொழுது, இதனை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையோடு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்காக ரஜினிகாந்த் வீடு ஒன்றிணையும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அவற்றை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளாமல் இரண்டு சொத்துக்களையும் விற்று விட்டார்.

Also Read: ரஜினிக்காக எழுதிய கதையில் நடிக்கும் வாரிசு நடிகர்.. பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள ராஜ்கமல் நிறுவனம்

மேலும் அந்த பணத்தை கொண்டு படம் தயாரிப்பதில் முதலீடு செய்து பெரும் நஷ்டம் அடைந்துள்ளார். ஆனால் தற்பொழுது கூட மிக மோசமான நிலையில் மீண்டும் ரஜினியிடம் உதவி கேட்டுள்ளார். மேலும் ரஜினி அவர்கள் இதைப் பற்றி எல்லாம் எதையும் யோசிக்காமல் வி ஏ துரை அவர்களுக்கு மீண்டும் அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினி யாருக்கும் உதவி செய்ய மாட்டார் என்பது போல் பல தவறான செய்திகள் வெளிவந்த வண்ணமே இருந்து வந்தது. ஆனால் அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது உண்மையான முகம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதிலிருந்து உண்மையான ஆன்மீகவாதி ரஜினி தான் என்று நிரூபணம் ஆகி இருக்கிறது.

Also Read: ரஜினி போல் பிழைக்கத் தெரியாத கமல்.. நல்லது செஞ்சும் வாங்கும் கெட்ட பெயர்

Trending News