நடிப்பில் மிரள விட்ட தனுஷ்.. பூரித்துப் போன தயாரிப்பாளர்

தனுஷ் நடிப்பில் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து இவர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் ஹிட்டான நிலையில் படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பற்றி தயாரிப்பாளர் தாணு மிகவும் பெருமையாக பேசி இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை கலைக்குழு எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் தான் எழுதி இருக்கிறார். மேலும் அவர் இதில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது இந்த படத்தின் கதையை கேட்கும் போதே எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. அதன் பிறகு தான் இந்த கதையை தனுஷ் எழுதி இருக்கிறார் என்று எனக்கு தெரிய வந்தது. அவரே அந்த கேரக்டரில் நடிக்கிறார் என்று கேட்டதுமே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஏனென்றால் தனுசை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை செய்ய முடியாது என்னும் அளவுக்கு அவர் மிரட்டி இருக்கிறார். இதில் நல்லவனாகவும், கெட்டவனாகவும் அவர் காட்டியிருக்கும் பரிமாணம் நிச்சயம் வேற லெவலில் ரசிகர்களை குஷிப்படுத்தும்.

இந்த கதையை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்க முடியாது. அந்த வகையில் இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு இது போன்ற நிறைய கதைகள் வரலாம். அப்படி ஒரு ட்ரெண்ட்டை தனுஷ் நிச்சயம் உருவாக்குவார் என்று அவர் மிகவும் சந்தோஷத்துடன் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் நானே வருவேன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement Amazon Prime Banner