வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

எம்ஜிஆர் இடத்தை நிரப்ப, இவரால் மட்டுமே முடியும்.. அடித்து சொன்ன மூத்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார், அடுத்த உலக நாயகன், அடுத்த விஜய் என வரிசையாக பல முன்னணி நடிகர்களின் இடத்தைப் பிடிப்பதற்கு இளம் நடிகர்கள் போட்டி போடுகின்றனர். ஆனால் அரசியலிலும் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்திய எம்ஜிஆரின் இடத்தை இவரால் மட்டுமே நிரப்ப முடியும் என மூத்த தயாரிப்பாளர் ஒருவர் அடித்து சொல்கிறார்.

இன்றைக்கு ஒரு எம்ஜிஆர் வேண்டும் என்றால், அது அஜித்தால் மட்டுமே முடியும். ஆனால் அஜித் வெளியே வர வெட்கப்படுகிறாரா அல்லது அரசியலை வேண்டாம் என நினைக்கிறாரா என இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.

Also Read: சினிமாவை விட்டு விலகும் இரு நட்சத்திரங்கள்.. சைடு கேப்பில் டாப் இடங்களுக்கு போட்டி போடும் நடிகர்கள்

ஒருவேளை அவர் மட்டும் வெளியே வந்து மக்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டால், தமிழகம் எங்கேயோ சென்று விடும். அவர் எம்ஜிஆர் செய்த தர்மங்களில் முக்கால்வாசியை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அது வெளிப்படையாக தெரியாமலே போகிறது.

அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றால், அவர் மறைமுகமாக செய்த நன்மைகள் எல்லாம் வெளியில் தெரிந்தாக வேண்டும். தற்போது தமிழகத்திற்கு ஒரு எம்ஜிஆர் வேண்டும், அது அஜித்தால் மட்டுமே முடியும். அடுத்த எம்ஜிஆருக்கு உரிய தகுதி அனைத்தும் அஜித்துக்கே உண்டு.

Also Read: சிவாஜியின் காதலை பற்றி சொன்ன எம் ஜி ஆர்.. நாடகத்திலிருந்து கிசுகிசுக்கப்பட்ட நடிகர் திலகம்

ஒழுக்கத்திலும் அஜித்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சமீபத்திய பேட்டியில் மூத்த தயாரிப்பாளர் கே ராஜன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனால் அஜித்தை பொறுத்தவரை அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் கூட இருக்கக் கூடாது என அதை கலைத்து விட்டார்.

அப்படி இருக்கையில் அவர் எம்ஜிஆர் போல் அரசியலுக்கு வருவது சாத்தியமா என்பது கேள்வி குறிதான். எந்த பொது நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொள்ளாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்க கூடிய அஜித்தை அடுத்த எம்ஜிஆர் என கே ராஜன் அடித்துச் சொன்னது தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: மூணு வருஷத்துல விஜய்யை காலி செய்யணும்.. 4 பான் இந்தியா இயக்குனர்களுடன் கூட்டணி போடும் அஜித்

Trending News