ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

புலம்பி தள்ளும் தயாரிப்பாளர்.. செல்லுமிடமெல்லாம் திட்டும் படி செய்த விஷால்

எங்கே போனாலும் விஷாலை சர்ச்சை சுற்றி சுற்றி அடிக்கிறது. அந்தப் படம் பிரச்சனை, இந்தபடம் பிரச்சனை என்று பிரச்சினை மேல் பிரச்சினை சூழ்ந்து வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் விஷால்.

இதற்கிடையில் நடிகர் சங்க தேர்தலில் வேறு வெற்றி பெற்று சங்கத்தை கட்டியே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வருகிறார். விஷாலை வைத்து, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக இருந்த மார்க் ஆண்டனி படம் டிராப் ஆனது என்று சொல்லி வருகிறார்கள்.

ஆனால் அந்தப் படம் டிராப் ஆகவில்லையாம். விஷாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எடுக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தை அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக எடுக்க விஷால் திட்டமிட்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க பழைய தயாரிப்பாளர்கள் இவரை நம்பி அந்த படத்திற்காக ஒரு பெரும் செட்டை போட்டு நஷ்டமடைந்து உள்ளாராம். அதற்கே பல கோடி ரூபாய் செலவாகி விட்டதாம். அதுமட்டுமில்லாமல் ஷூட்டிங்கிற்காக பல இடங்களை புக் செய்தே நஷ்டம் ஆகி உள்ளனராம்.

ஆகையால் செல்லும் இடத்தில் எல்லாம் விஷாலை பற்றி மார்க் ஆண்டனி படத்தை தயாரிக்க இருந்த அந்த தயாரிப்பாளர் தற்போது சாபமிட்டு வருகிறார். எங்களைப்போல் ஆட்களை செலவு செய்ய வைத்து ஏமாற்றி விடுகிறார் விஷால் என்று புலம்பி வருகிறாராம் அந்த தயாரிப்பாளர்.

இப்படித்தான் கடந்த சில வருடங்களாகவே விஷால் நடிக்கும் ஒவ்வொரு படத்தினுடைய இயக்குனர் தயாரிப்பாளர்களுக்கும் விஷாலுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதன் பிறகு அவரே அதை தயாரித்து இயக்கி படங்களை ரிலீஸ் செய்வதை தற்போது வழக்கமாக வைத்திருக்கிறார்.

Trending News