செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

விஜய்க்கு எடுத்த 7 படமும் சூப்பர் ஹிட் கொடுத்த ராசியான தயாரிப்பாளர்.. நன்றி மறக்காத தளபதி

தளபதி விஜய்: பில்டிங் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்றால் பேஸ்மெண்ட் உறுதியாக இருக்க வேண்டும். அதுபோல ஆரம்ப காலகட்டத்திலேயே தளபதி விஜய்க்கு, ராசியான தயாரிப்பாளர் ஒருவரின் தொடர் 7 படங்கள் பேரும் புகழும் வாங்கித் தந்தது. தற்போது வரை விஜய் அந்த நன்றியை மறக்கவில்லை, சரி யார் அவர் என்ன திரைப்படங்கள் என்று பார்க்கலாம்.

குழந்தை நட்சத்திரமாக 500 ரூபாய் சம்பளத்திற்கு தொடங்கி, நாளைய தீர்ப்பு என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். சிறுசு முதல் பெருசு வரை தனது அசாத்திய நடிப்பினால் அனைவரின் நெஞ்சிலும் இடம் பிடித்தவர்.அப்படி இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் மிகவும் முக்கியமானவர்.

Also Read:நடிகை இறந்த பிறகும் கூட நடந்த அந்தரங்க உறவு.. இச்சையை தீர்த்துக் கொண்ட பிணந்தின்னி கழுகுகள்

தளபதி விஜயின் வெற்றி திரைப்படங்களுக்கு தொடக்கமாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி. 1988ல் சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவினர். தொடர்ந்து 20 வருடங்கள் திரைப்படங்கள் தயாரித்து வந்தார். முதன்மை இயக்குனர்களான கே எஸ் ரவிக்குமார், விக்ரமன், லிங்குசாமி போன்றோர் உடன் இணைந்து பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.

1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த “பூவே உனக்காக” திரைப்படத்தில் தான் ஆர் பி விஜய் விஜயும் முதல் முதலாக இணைந்தனர். சுமார் 250 நாட்கள் திரையில் வெற்றிகரமாக ஓடி, பிளாக் பஸ்டர் திரைப்படமாக விஜயின் கேரியரில் அமைந்தது. இது தெலுங்கு, கன்னடா, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்ப்பட்டது.

Also Read:காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

பிறகு 1997இல் பாஸ்கரன் இயக்கத்தில் “லவ் டுடே” திரைப்படம். ஹீரோ தனது காதல் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக வெளிக்கொண்டு வந்திருப்பார் . இது ஒரு பிரம்மாண்ட மெகா ஹிட் திரைப்படம் ஆக அமைந்தது. 1998இல் வெளிவந்த “நினைத்தேன் வந்தாய்” திரைப்படமும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 1999இல் எழில் இயக்கத்தில் வெளியான “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தையும் தயாரித்தார். சூப்பர் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம்.விஜயின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று ஆகும்.

2001 இல் ஆர் ராஜா இயக்கத்தில் வெளியான “ஷாஜகான்” மூலம் பேரும் புகழும் விஜய்க்கு கிடைத்தது. காதலில் சந்திக்கும்  பிரச்சனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பார்கள். பிறகு 2005 இல் வெளியான “திருப்பாச்சி” திரைப்படமும் பயங்கர கமர்சியல் வெற்றியும் அடைந்தது. 2014 இல் மோகன் லால் விஜய் கூட்டணியில் வெளியான ஜில்லா திரைப்படமும் பெரியளவு வெற்றி பெற்றது

Also Read:காந்தி மகான் போல் வாழும் 5 நடிகர்கள்.. இப்பவும் இளமை துள்ளலோடு இருக்கும் ஆக்சன் கிங்

Trending News