புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உதயநிதியால் 13 கோடி நஷ்டம்.. வேதனையுடன் வீடியோ வெளியிட்ட தயாரிப்பாளர்

Udhayanidhi : உதயநிதி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இப்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த சமயத்தில் உதயநிதியால் தயாரிப்பாளர் ஒருவர் 13 கோடி நஷ்டத்தை அடைந்ததாக கூறியிருக்கிறார்.

அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் வாரிசாக இருந்தாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் உதயநிதி ஆரம்பத்தில் நகைச்சுவையான படங்களில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து சீரியஸ் மற்றும் ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார். மேலும் அரசியலில் இறங்கியவுடன் அவரது கடைசி படமான மாமன்னன் படத்துடன் திரை உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

உதயநிதி நடித்த ஏஞ்சல் படம்

அதன் பிறகு கமல் தயாரிப்பில் நடிக்க இருந்ததையும் தவிர்த்து விட்டார். ஆனால் உதயநிதியின் கடைசி படம் மாமன்னன் இல்லையாம். அதாவது 2018 ஆம் ஆண்டு உதயநிதி நடிப்பில் ஏஞ்சல் என்ற படம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவிட் காரணமாக இடையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தொடங்கிய போது உதயநிதி அரசியலில் இறங்கி விட்டாராம். ஒரு பத்து நாள் மட்டும் உதயநிதியின் கால்ஷீட் கிடைத்தால் படத்தை முழுவதுமாக முடித்திருக்கலாம் என வேதனை உடன் ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளர் ராம் சரவணன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மேலும் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். ஏஞ்சல் படம் உதயநிதியால் தடைபட்ட நிலையில் தனக்கு 13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நிம்மதியை இழந்து உள்ளதாக அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

Trending News