நடிகைகள் பொதுவாகவே அவர்களுடன் மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட், காஸ்டியூம் டிசைனர், உதவியாளர், நியூட்ரனிஸ்ட் என ஐந்து முதல் எட்டு பேரை வரை தங்களுக்கு உதவியாளராக வைத்து கொள்கிறார்கள். ஆனால் இந்த உதவியாளர்களுக்கு அவர்கள் சம்பளம் கொடுக்காமல் தயாரிப்பாளர்களையே கொடுக்க வைக்கிறார்கள்.
இது போன்ற பிரச்சினை ஏற்கனவே தெலுங்கு இண்டஸ்ட்ரியில் நடந்து கொண்டிருந்தது. அதை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. நடிகர்கள், நடிகைகள் தங்கள் உதவியாளர்கள், பௌன்சர்களுக்கு அவர்களே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து இருக்கிறார்கள்.
Also Read: தென்னிந்திய படங்களை பற்றி கேவலமாக பேசிய ராசி கண்ணா.. அந்த பயம் இருக்கணும்
நடிகைகளில் ராசி கண்ணா மற்றும் பூஜா ஹெக்டே இப்போது கொஞ்சம் நல்ல மார்க்கெட் இருக்கும் நடிகைகளாக இருக்கின்றனர். பூஜா ஹெக்டே தளபதி விஜயுடன் பீஸ்ட் படம் பண்ணியதிலிருந்து தென்னிந்திய சினிமா உலகத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அது போலவே ராசி கண்ணாவுக்கும் இப்போது திருசிற்றம்பலம் படம் ஹிட் படமாக அமைந்துள்ளது.
மார்க்கெட் ஏறிக்கொண்டிருக்க இந்த நடிகைகள் பண்ணும் அட்டூழியங்கள் அதற்கு மேல் அத்துமீறி போகிறது. இவர்கள் இருவரும் தங்களுக்கு உதவியாளர்கள் மட்டுமின்றி, ரீலிஸ் எடுக்க கூட ஒரு அசிஸ்டன்டை கூட வைத்திருக்கிறார்களாம். இவர்களுக்கும் ப்ரொட்யூசர்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டுமாம்.
Also Read: சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட பூஜா ஹெக்டே.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்
இதனால் கடுப்பான தயாரிப்பாளர்கள் இனிமேல் உங்கள் உதவியாளர்களுக்கு நாங்க சம்பளம் கொடுக்க மாட்டோம், நீங்க தான் கொடுக்கணும் என்று சொல்லிவிட்டார்களாம். தெலுங்கு இண்டஸ்ட்ரி போல கோலிவுட்டிலும் கடுமையான முடிவுகள் எடுத்தால் தான் இது போன்று நடக்காமல் இருக்கும்.
அவுட்டோர் சூட்டிங் எல்லாம் போகும் போது இந்த நடிகர், நடிகைகள் தங்கள் உதவியாளர்களையும் கூடவே அழைத்து வருகின்றனர். அவர்கள் தங்கும் செலவு, சாப்பாடு செலவு என அனைத்தும் தயாரிப்பாளர்கள் தலையில் தான். இதெல்லாம் முறையாக கோலிவுட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேண்டும்.
Also Read: பூஜா ஹெக்டேக்கு நடந்த மோசமான சம்பவம்.. வேதனையுடன் போட்ட பதிவு