விஷால் 2018 இல் இருந்து 2023 வரை ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் திணறி வந்தார். மொத்தமாய் அவர் கேரியர் சறுக்கும் நிலையில் இருந்தது, சண்டைக்கோழி 2இல் ஆரம்பித்த ஃபிளாப் அதன் பின் அயோக்கிய, ஆக்சன், எனிமி, சக்ரா என எந்த படமும் கை கொடுக்கவில்லை.
பழைய சூப்பர் ஹிட் படமான துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என அதை நோக்கி பயணித்தார். இதற்காக அந்த படத்தின் இயக்குனர் மிஷ்கின் லண்டன் சென்று கதையெல்லாம் எழுதிவந்தார். ஆனால் மிஸ்கின் மற்றும் விஷால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
துப்பறிவாளன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது. எப்படியாவது இந்த படத்தை எடுத்தாக வேண்டும் என விஷால் துடியாய் துடித்தார். இதற்காக தயாரிப்பாளர்களிடமும், பைனான்சியர்களிடமும் பேசி வந்தார் ஆனால் விஷாலை நம்பி யாரும் பணம் போட தயாராக இல்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் படம் இயக்க வேண்டாம் நடிக்கலாம் என நினைத்தவருக்கு மேலும் பிரச்சனை வந்தது. எந்த தயாரிப்பாளரும் இவரை நம்பி படம் பண்ணுவதற்கு வரவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் மொத்த கேரியரையும் இழந்தார் விஷால் . அதன் பின் 2023 ஆம் ஆண்டு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைத்தார்.
மார்க் ஆண்டனி படம் அவருக்கு சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் மூலம் தனது கேரியரை மீட்டெடுத்தார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பு அனைவரையும்கவர்ந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.
இப்பொழுது தயாரிப்பாளர்கள் எஸ் ஜே சூர்யா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி என்றால் சம்மதம் தெரிவித்து வருகிறார்கள்.