திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ராஷ்மிகா பக்கம் போக பயப்படும் தயாரிப்பாளர்கள்.. நியாயமே இல்லாமல் உயர்த்திய சம்பளம்

ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்திருக்கிறார். அந்த வகையில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என்று அவர் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ரொம்ப பிசியாக இருக்கும் ராஷ்மிகா தன்னுடைய சம்பளத்தை நான்கு கோடியாக உயர்த்தி இருக்கிறார்.

Also read:விஜயுடன் செல்பி புகைப்படம் எடுத்த ராஷ்மிகா.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பான வம்சி

ஆரம்பத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர் புஷ்பா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறார். இதனால் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் சற்று யோசிக்கிறார்களாம்.

ஆனாலும் ராஷ்மிகா தன்னுடைய சம்பளத்தை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறாராம். அந்த வகையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்திற்கு கூட அவர் 4 கோடி சம்பளத்தை தான் பேசி ஓகே செய்து இருக்கிறார்.

Also read:கோடிகளை கொட்டிக் கொடுத்த தளபதி 67 டீம்.. வில்லன் நடிகருக்கு இவ்வளவு சம்பளமா

இப்படி அவர் ரொம்பவும் கறார் காட்டுவதால் தயாரிப்பாளர்கள் இவரை புக் செய்ய தயங்கி வேறு நடிகையை தேடி ஓட்டம் எடுக்கிறார்களாம். ஆனால் ராஷ்மிகாவுக்கு இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. ஏனென்றால் அவர் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது.

மேலும் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாரிசு திரைப்படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுவேன் என்று தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறி வருகிறாராம்.

Also read:விஜய் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்த கௌதம் மேனன்.. வெந்து தணிந்தது காடு இந்த படத்தின் காப்பியா?

Trending News