ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வெற்றிமாறனுடைய பெரிய மைனஸ்.. தலையில் துண்டை போடவைக்கும் படுபாதக செயல்

சினிமா துறையை பொறுத்தவரையிலும் ஒரு படத்தை எடுப்பதற்காக மட்டும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இரைக்கின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர்கள் எப்படியாவது தங்களது படங்களில் லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் இயக்குனர் வெற்றிமாறனின் செயல்களால் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போடும் அளவிற்கு வந்துள்ளனர்.

அப்படியாக தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி கூட பணத்தை இயக்குனர்களை நம்பி படங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட மாதத்திற்குள் முடிய வேண்டிய ஒரு படத்தை வருடக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர். இதனால் படத்தின் பட்ஜெட் ஆனது தாறுமாறாக எகிறி உள்ளது.

Also Read: விடுதலை 2-ம் பாகத்தின் ஹீரோ சூரி இல்லையாம்.. வியாபாரத்திற்காக வெற்றிமாறன் போட்ட பெரிய பிளான்

தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகரான சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. இப்படம் நான்கு கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட  இரண்டு வருடங்களாக இயக்குனர் இந்த படத்தை இழுத்தடித்து விட்டார். இதன் காரணமாக படத்தின் பட்ஜெட்டை விடவும் மூன்று மடங்கு தாண்டி விட்டதால் தயாரிப்பாளர்கள் செய்வதறியாது விழி பிதுங்கி நின்று வருகின்றனர்.

அதிலும் இப்பொழுது இருக்கின்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் கந்த வட்டிக்கு தான் பணத்தை வாங்கி படத்தை தயாரித்து வருகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு படத்தை குறிப்பிட்ட மாதத்திற்குள் அல்லது வருடத்திற்குள் எடுத்து முடிக்க வேண்டும். ஆனால் வெற்றி மாறனை பொறுத்தவரையிலும் ஷூட்டிங் முடிந்த பின்பும் கூட அதில் எளிதாக திருப்தி அடைய மாட்டாராம்.

Also Read: நம்ப வச்சு ஏமாற்றிய வெற்றிமாறன்.. மேடையில் சிரிச்சுக்கிட்டே அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி

இதனைத் தொடர்ந்து இவர் இயக்கும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்த வருவாராம். இதனாலேயே இவரின் படத்திற்காக மீண்டும் மீண்டும் கால்ஷீட், ஷெட்யூல் என இழுத்துக் கொண்டே போவாராம். இதே நிலைமை தான் இவருடைய மற்ற படங்களிலும் நீடித்து வருகிறது. 

இப்படி படத்திற்காக போட்ட பட்ஜெட்டை விட அதிகமானால் அவர்களால் எப்படி வட்டியை சமாளிக்க முடியும் என்று வேதனை தெரிவித்து வருகின்றனர். அதிலும் இயக்குனர் வெற்றிமாறனை நம்பி படத்தை தயாரித்தால் படத்துடன் சேர்ந்து, பட்ஜெட்டையும் இழுத்துக் கொண்டே போய்விடுவார். இதனால் வட்டி கட்ட முடியாமல் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை தான் போட வேண்டும் என்று புலம்பி வருகின்றனர்.

Also Read: விடுதலை ரிலீஸுக்கு முன்பே வெளிவந்த சூரியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர்.. காமெடிக்கு இனி வாய்ப்பே இல்லையாம்!

Trending News