வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூலை தாண்டியதா PS2.? முதல் வார கலெக்சன் ரிப்போர்ட்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கடந்த வாரம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆனது. முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆன நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்சன் இணைந்து தயாரித்த இந்த இரண்டு பாகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 500 கோடி செலவில் உருவானது.

கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக்கி இருப்பது தமிழ் சினிமாவிற்கே மிகப்பெரிய பெருமையான விஷயமாக இருக்கிறது. இந்த நாவலின் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட வடிவில் இதை பார்ப்பதற்காக ரொம்பவும் ஆவலாக இருந்தனர். இதனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆகும் பொழுது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

Also Read: சோழ, பாண்டியர்களுக்கு இடையே நடக்கும் வசூல் போட்டி.. யாத்திசை, பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் முடிவில் சோழ அரசன் அருள்மொழிவர்மன் மற்றும் வந்திய தேவன் இருவரும் கடலில் மூழ்குவது போல் காட்டப்பட்டிருந்தது. இதனால் இரண்டாம் பாகத்தில் இவர்கள் இருவரும் என்ன ஆனார்கள், யார் அந்த ஊமை ராணி, ஆதித்த கரிகாலனை கொன்றது யார் போன்ற கேள்விகளுடன் இரண்டாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தது.

தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் வார கலெக்சன் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படம் 150 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. படத்தின் முதல் நாள் வசூல் 60 கோடி என்று சொல்லப்படுகிறது. மேலும் வார இறுதி நாளான நேற்று 50 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் பார்த்தால் 25 முதல் 30 கோடி வரை மட்டுமே வசூலித்திருக்கிறது.

Also Read: காலி பெருங்காய டப்பாவான மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் 2வை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

இரண்டாம் பாகத்தின் வசூலை, முதல் பாகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது PS 2 வசூலில் ரொம்பவும் அடிவாங்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாகத்தின் ஒரு வார வசூல் என்பது 230 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது பல திருப்பங்களுடனும், எதிர்பாராத காட்சிகளுடனும் ரிலீஸ் ஆகி இருக்கும் இந்த இரண்டாம் பாகம் 150 கோடி தான் வசூல் செய்திருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 80 கோடி வித்தியாசத்தில் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட அந்த நாவலின் வாசகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்ல வேண்டும். கதையில் ரொம்பவும் ரசித்துப் படித்த மணிமேகலை மற்றும் சேந்தன் அமுதன் போன்ற கதாபாத்திரங்கள் படத்தில் இடம்பெறவே இல்லை. மேலும் மணி மகுடம் சூட்டும் காட்சியாக இருக்கட்டும், ஆதித்த கரிகாலனின் இறப்பு நிகழ்வாக இருக்கட்டும் படமாக பார்ப்பவர்களை தவிர்த்து வாசகர்களுக்கு அதிருப்தியை தான் கொடுத்திருக்கிறது.

Also Read: மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பொன்னியின் செல்வன்.. பாகுபலி விட ஆயிரம் மடங்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா?

Trending News