செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

புதுப்பேட்டை பட முரட்டு வில்லன் அழகம்பெருமாள் இயக்கிய 3 படங்கள் .. மாதவனுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த படம்

Azhagam Perumal Directed Movies: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் புதுப்பேட்டை. இந்தப் படத்தில் நடிகர் அழகம் பெருமாள் வித்தியாசமான வில்லனாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இன்று வரை அவரை வேறு எந்த படங்களை பார்த்தாலும் புதுப்பேட்டை திரைப்படத்தின் வில்லன் ஆகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்.

வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தான் இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் இவர் இயக்குனராகும் ஆசையில் தான் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் மொத்தம் மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். அதில் ஒன்று நடிகர் விஜய்க்கும், மற்றொன்று மாதவனுக்கும் ஆகும்.

Also Read:தனுஷ் அதிரடியாய் கலக்கிய சமீபத்திய 6 படங்கள்.. சைக்கோவாய் மிரட்டிய நானே வருவேன்

கடந்த 2001 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ஜோதிகா நடிப்பில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் டும் டும் டும். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்தான் தயாரித்து இருக்கிறது. இந்த படம் மூலமாகத்தான் அழகம் பெருமாள் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் திரைப்படமாக இருக்கிறது. முதல் படத்திலேயே இயக்குனராக அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த்தை வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் ஆன ஜூட் திரைப்படத்தை இயக்கியிருந்தார் அழகம்பெருமாள். இந்த படத்தில் மீரா ஜாஸ்மின், விவேக் ஆகியோரும் நடித்திருந்தனர். டும் டும் டும் திரைப்படத்தை ஒப்பிடும் பொழுது அந்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெறவில்லை.

Also Read:51வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்.. கடைசியில் வடசென்னை ரசிகர்களுக்கு கொடுத்த கல்தா

நீண்ட வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் சிம்ரன் இணைந்து இயக்குனர் அழகம் பெருமாள் இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் உதயா. இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் நாசர் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் உதயா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

உதயா திரைப்படத்திற்கு பிறகு அழகம்பெருமாள் வேறு எந்த படங்களும் இயக்கவில்லை. கடந்த 2002இல் அலைபாயுதே திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த இவர் தற்போது நடிப்பையே முழு தொழிலாக மாற்றி விட்டார். இவருடைய நடிப்பில் கற்றது தமிழ், கண்டேன் காதலை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

Also Read:ரத்தம் தெறிக்க கொலைவெறியோடு வந்த கில்லர்.. ரிலீஸ் தேதியோடு வெளியான கேப்டன் மில்லர் டீசர்

Trending News