வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

CWC 5-ல் ஓவர் ஆட்டம் போடும் புகழ், செம கடுப்பில் கோமாளிகள்.. என்ன தான் நடக்குது விஜய் டிவியில்

Cook with comali season 5: விஜய் டிவியை பொறுத்த வரைக்கும் டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது இணையவாசிகளின் கருத்து. ஒருவரை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டால் எல்லா நிகழ்ச்சியிலும் அவரை வரவழைத்து அந்த முகத்தை பார்த்தாலே வெறுப்பாகும் அளவிற்கு செய்து விடுவார்கள்.

டிடி, சிவகார்த்திகேயன், அறந்தாங்கி நிஷா, ராமர் போன்றவர்கள் எல்லாம் இந்த லிஸ்ட் தான். ஒன்று அவர்களுடைய சேனல் என் டி ஆர் பி யை ஏத்த படாத பாடு படுவார்கள் இல்லை என்றால் அடுத்த சேனலின் டிஆர்பிஐ எப்படி கெடுக்கலாம் என யோசிப்பார்கள்.

அப்படிப்பட்ட விஜய் டிவிக்கு பிறந்த பேரணி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேசன் அவர்களிடமிருந்து விலகியது. சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியை அவர்கள் ஆரம்பித்து பட்டையை கிளப்பி வருகிறார்கள்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நாளுக்கு நாள் அடி வாங்கி வருகிறது. இதனால் அடிக்கடி கோமாளிகளை மாற்றி யார் வந்தால் மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதை சோதனை இட்டு வருகிறார்கள்.

ஓவர் ஆட்டம் போடும் புகழ்

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நாஞ்சில் விஜயன் கோமாளிகளின் ஒருவராக இருந்தார். ஆனால் அவர் நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில வாரங்களிலேயே விலகி விட்டார். இது பற்றி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அந்த நிகழ்ச்சி தரப்பினரிடம் இருந்து தனக்கான மரியாதை சரியாக கிடைக்கவில்லை என்பதுதான் காரணம் என சொல்லி இருக்கிறார்.

அவருடைய பேட்டி வீடியோவில் பலரும் கமெண்ட் செய்து திட்டி இருப்பது விஜய் டிவி புகழை தான். புகழ் இருப்பதால் மற்ற கோமாளிகளுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

புகழ் குக், கோமாளி, ஜட்ஜ் என அத்தனை பேரையும் கலாய்க்கிறார். மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் எல்லோரிடத்திலும் தானே ஸ்கோர் செய்து கொள்கிறார். யாரையும் நகைச்சுவை செய்ய விடுவதில்லை என பல குற்றச்சாட்டுகளை அந்த நிகழ்ச்சியின் நேயர்கள் வைத்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கும் மற்ற கோமாளிகள் எல்லோருமே புகழுக்கு சீனியர்கள் தான். புகழ் வந்தால் நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள் மக்கள் என நினைத்துக் கொண்டு அவருக்கு ஏகப்பட்ட இடம் விஜய் டிவியில் கொடுக்கப்படுகிறது.

இதனால்தான் மற்ற விஜய் டிவி காமெடியன்கள் கடுப்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உள்ளுக்குள்ளேயே இத்தனை பிரச்சனையை வைத்துக் கொண்டு, மற்ற சேனலுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.

Trending News