Pune porche car accident: மது போதை, 150 கிலோ மீட்டர் வேகத்தில் டிரைவிங், 2.5 கோடி மதிப்பிலான சொகுசு கார் இதற்கு பலியானது இரண்டு உயிர்கள். புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதில் வாகனம் கட்டுப்பாடு இழந்து முன்னே போன இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி இரண்டு ஐடி ஊழியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
மக்களும் காரை மடக்கி பிடித்து கார் ஓட்டி வந்தவரை காவலரிடம் ஒப்படைத்தனர். கடைசியில் பார்த்தால் காரை ஓட்டி வந்த பையனுக்கு வயது 17. காருக்கு நிரந்தர பதிவு இன்னும் செய்யப்படவில்லை. விபத்து ஏற்படுத்தி இரண்டு உயிர்கள் போன நிலையில் 15 மணி நேரத்தில் அந்த சிறுவனுக்கு ஜாமீன் கிடைக்கிறது.
உள்ளே இருந்த அந்த 15 மணி நேரத்தில் அவன் சாப்பிடுவதற்கு பிசா மற்றும் பர்கர் கொடுக்கப்படுகிறது. இதுதான் நம் நாட்டின் நீதியா என ஒவ்வொரு இந்தியர்களும் கொந்தளித்து வருகிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது அந்த சிறுவனின் தந்தையை மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்து இருக்கிறார்கள்.
17 வயது குடிகரனால் பறிபோன 2 உயிர்கள்
17 வயது மகனுக்கு பிறந்தநாள் பரிசாக ரெண்டு புள்ளி ஐந்து கோடி மதிப்பிலான காரை வாங்கிக் கொடுத்திருக்கிறார் அந்த செல்வ சீமான். மகனும் பணத்திலேயே பிறந்து, பணத்திலேயே வளர்ந்ததால் தான் இந்த விபரீதம்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த விபத்தை ஏற்படுத்துகிறான் அந்த 17 வயது சிறுவன். அதற்கு முன் அவன் இருந்தது பிரபல பப் ஒன்றில். 90 நிமிடங்கள் அங்கே செலவழித்த அந்த சிறுவன் 48 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கிறான்.
சாமானிய மக்களின் வீட்டில் மூன்று மாத சாப்பாட்டு செலவு தான் இந்த 48 ஆயிரம் ரூபாய். தந்தையின் பிரபலம் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவன் என்பதால் ஈசியாக கேசிலிருந்து தப்பித்து விடுவான் இந்த சிறுவன்.
கார் வாங்கிக் கொடுத்த அப்பா, 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவனுக்கு மதுபானம் வழங்கிய பப்புக்கு சீல். இதைத் தாண்டி அந்த சிறுவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. போக்குவரத்து காவல்துறையினருடன் 15 நாட்கள் வேலை செய்ய வேண்டும், சாலை விபத்து குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்ற நிபந்தனைகள் வேற அந்த ஜாமின் வழக்கில்.
17 வயதில் தலைக்குரிய வரை போதை அருந்தும் அந்தப் பையனை சிறுவன் என்ற லிஸ்டில் எப்படி சேர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. வார இறுதி வந்து விட்டால் சரக்கு அடித்து சந்தோஷமாக இருந்துவிட்டு, இரண்டு உயிர்களையும் எடுத்த கொடூரனை விழிப்புணர்வு கடிதம் எழுத வைத்தால் போதுமா. சில நேரங்களில் நம் சட்டங்களை பார்க்கும் பொழுது தலையில் அடித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது.