Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியல் தான் அனைவரது மனதையும் கவர்ந்து குடும்பத்துடன் பார்க்கும் படியாக கதை நகர்ந்து வந்தது. ஆனால் சமீப காலமாக கதை சொதப்பியதால் பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் வெறுத்துப் போய்விட்டார்கள் என்றே சொல்லலாம். இதனால் இந்த நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் பின்னடைவை சந்தித்தது.
அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு
பிறகு இப்படியே போனால் சேர்த்து வைத்த கொஞ்ச நெஞ்ச மனமும் போய்விடும் என்ற பயத்தினால் முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று மொத்த டீமும் முடிவு செய்துவிட்டார்கள். அந்த வகையில் இந்த வாரம் நிறைவு பகுதி வாரமாக அவசர அவசரமாக முடிக்க போகிறார்கள். அதனால் நாளைக்கு இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட போகிறார்கள்.
இவ்வளவு நாள் புரியாத புதிராக இருந்த அப்பத்தாவின் இறப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. அந்த வகையில் குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அப்பத்தா உள்ளே நுழைகிறார். இவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் ஏன் இன்னும் வரை இவருடைய கதாபாத்திரத்தை காட்டப்படவில்லை என்று ஒரு குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சரியான நேரத்தில் அப்பத்தா என்டரி கொடுத்து குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்கிறார். அதாவது குணசேகரனின் இந்த மாதிரி ஆணாதிக்க திமிரை அடக்க வேண்டும் என்றால் அவருக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும். அத்துடன் பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடியவருக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அப்பத்தா கூறுகிறார்.
அதனால் அவருடைய மனநிலை சரி செய்யும் விதமாக மனநலக் காப்பகத்தில் சேர்க்கும் படி பரிந்துரை கொடுக்கப் போகிறார். கடைசி வரை திருந்தாத குணசேகரனுக்கு கிடைக்கும் தண்டனையாக இது பெரிய சவுக்கடியாக விழப்போகிறது. கதையை தான் கொஞ்ச நாளாக சொதப்பிவிட்டோம் முடிவையாவது பெஸ்ட்டாக கொடுப்போம் என்ற காரணத்திற்காக ஜீவானந்தம், அப்பத்தாவை வரவைத்து முடங்கி கிடந்த பெண்களுக்கு விடிவு காலம் ஏற்படுத்திவிட்டார்.
குணசேகருக்கு தயாராக இருக்கும் ஆப்பு
- குணசேகனுக்கு கோர்ட்டில் கிடைக்கப் போகும் தீர்ப்பு
- அப்பத்தா மறுத்ததால் குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜீவானந்தம்
- மாமியார் வீட்டு விருந்துக்கு ரெடியான குணசேகரன்