Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

புஷ்பா 2-க்கு விளம்பரமே தேவையில்லை.. ராஜெமெளலி என்ன சொன்னார் தெரியுமா?

புஷ்பா 2-க்கு விளம்பரமே தேவையில்லை.. ராஜெமெளலி என்ன சொன்னார் தெரியுமா?

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா – ஃபகத் பாசில் நடித்துள்ள படம் புஷ்பா தி ரூல். இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. அதனால், படக்குழுவினர் தமிழகம், […]

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா – ஃபகத் பாசில் நடித்துள்ள படம் புஷ்பா தி ரூல். இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.

அதனால், படக்குழுவினர் தமிழகம், கேரளம், மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் புரமோசன் செய்து வருகின்றனர்.

புஷ்பா படத்தைப் பார்த்து பாராட்டிய ராஜமெளலி!

இந்த புரமோசனில் பங்கேற்ற ராஜமெளலி, “புஷ்பா – 2 படத்தை விளம்பரம் செய்ய வேண்டியதில்லை. அது ஏற்கனவே மக்களின் வரவேற்பை பெற்றுவிட்டது.

இந்திய மக்கள் இப்படத்தை பார்க்க ஏற்கனவே டிக்கெட்டுகள் வாங்கிவிட்டனர். அதுதான் புஷ்பா படக்குழுவுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.

புஷ்பராஜ் எண்ட்ரி காட்சியை சுகுமார் எனக்கு போட்டுக் காண்பித்தார், நன்றாக இருந்தது. முதல் காட்சியே இப்படி இருக்கிறது என்றால் மொத்தப் படம் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்” என்று கூறினார்.

புஷ்பா படம் 300 கோடிக்கு மேல் வசூலீட்டியது. புஷ்பா 2 படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.