Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மல்லியப்பூக்கு மயங்கிய புஷ்பா புருஷன்.. 50 வயசுல இந்த பொழப்பு தேவையாடா கோபி

மல்லியப்பூக்கு மயங்கிய புஷ்பா புருஷன்.. 50 வயசுல இந்த பொழப்பு தேவையாடா கோபி

விஜய் டிவியில் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் தற்போது கோபி, ராதிகா திருமணம் அரங்கேரி உள்ளது. இதனால் பாக்கியலட்சுமி குடும்பத்தில் உள்ள அனைவரும் நிலைகுலைந்து போய் உள்ளனர். மேலும் எல்லோர் முன்னிலையிலும் பாக்யா குடும்பத்தினால் ராதிகாவும் அவமானப்பட்டதால் அவரும் […]

விஜய் டிவியில் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் தற்போது கோபி, ராதிகா திருமணம் அரங்கேரி உள்ளது. இதனால் பாக்கியலட்சுமி குடும்பத்தில் உள்ள அனைவரும் நிலைகுலைந்து போய் உள்ளனர். மேலும் எல்லோர் முன்னிலையிலும் பாக்யா குடும்பத்தினால் ராதிகாவும் அவமானப்பட்டதால் அவரும் கோபி மீது கோபத்தில் உள்ளார்.

இந்த சூழலில் கோபிக்கு இன்று முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராதிகாவின் மகள் மயூ அம்மாவுடன் தான் தூங்குவேன் என அடம் பிடிக்கிறார். ஆனால் மயூவின் பாட்டி கண்டித்து தன்னுடன் தூங்குமாறு மயூவை வற்புறுத்துகிறார். மேலும் ராதிகா கோபி ரூமுக்கு செல்கிறார்.

அங்கு கோபி ரொமான்டிக் மூடில் இருக்கிறார். 50 வயதில் இதெல்லாம் உனக்கு தேவையா கோபி என ரசிகர்கள் திட்டும் அளவுக்கு அவருடைய செயல்பாடு உள்ளது. மேலும் கோபி ராதிகாவை நெருங்கும் போது மண்டபத்தில் நடந்ததை நினைத்த ராதிகா அழுகிறார்.

ஒரு வழியாக ராதிகாவை கோபி சமாளித்து விடுகிறார். ஆனால் அதற்குள்ளாகவே மயூ அம்மாவுடன் தான் படுப்பேன் என அடம் பிடிப்பதால் ராதிகா தன்னுடன் படுத்துக் கொள்ளும்படி கூறுகிறார். ஆனால் கோபிக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார்.

மேலும் பேரப்பிள்ளை எடுக்க வேண்டிய வயதில் கோபிக்கு இது போன்ற வேலையா என ரசிகர்கள் தீர்த்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கோபி, ராதிகா இருவரையும் கொடைக்கானலுக்கு ஹனிமூன் அனுப்ப ராதிகா அம்மா, அண்ணன் ஏற்பாடு செய்துள்ளனர்.

இங்கேயாவது மயூ மட்டும் தான் பிரச்சனை. ஆனால் கொடைக்கானல் போன பிறகு தான் கோபிக்கு தெரிய உள்ளது மிகப்பெரிய தலைவலி அங்கு காத்திருக்கிறது. அதாவது பாக்யா குடும்பம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொத்தமாக கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இதனால் கோபி பல பிரச்சினைகளை சந்திக்க உள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.