திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வீட்டை பாதுகாக்க தெரியாத நீ, எங்கள பாதுகாக்க போறியா.? புஸ்சி ஆனந்த் சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டாரா விஜய்?

Thalapathy Vijay: தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர். கடந்த சில வருடங்களாகவே இவருடைய படங்கள் அத்தனையுமே கோடிக்கணக்கில் வசூல் செய்து வருகின்றன. கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று பல பிரபலங்களும் சொல்லும் வகையில் ஒட்டுமொத்த சினிமாவையும் தன் கைக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இவரைச் சுற்றி அரசியல் பேச்சுகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கு மிக முக்கிய காரணமே அவருடைய நடவடிக்கைகள் தான். அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தின் சார்பில் இருக்கும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, சமூக சேவைகள் செய்வது, கல்வி விருது வழங்கும் விழா, நேற்று இசிஆர் அலுவலகத்தில் நடந்த கூட்டம் என அத்தனையுமே விஜய் தன்னை அரசியலுக்காக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை ஒவ்வொரு முறையும் தமிழக மக்களுக்கு உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Also Read:தேவயானி மகளுக்கு ஜோடியாகும் விஜய்யின் மகன்.. அப்பா இயக்குனரின் பேராசை

நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது தளபதி விஜய் அவருடைய நிர்வாகிகளிடம் முதலில் குடும்பத்தை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது விஜய்க்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. ஏனென்றால் விஜய்க்கும், அவருடைய அப்பா சந்திரசேகருக்கும் பிரச்சனை இருப்பதாக சந்திரசேகர் உட்பட, பல பிரபலங்களும் வெளிப்படையாகவே மீடியா முன்பு சொல்லி வருகிறார்கள். ஆனால் விஜய் இது பற்றி இதுவரை எந்த கருத்துக்களுமே தெரிவிக்கவில்லை.

இதற்கு மிக முக்கிய காரணமே அவருடன் மிக நெருக்கத்தில் இருக்கும் புஸ்சி ஆனந்த் தான் என்று தற்போது சொல்லப்படுகிறது. விஜய்யின் அப்பா இயக்குனர் சந்திரசேகர் விஜய்யை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வதே இவர்தானாம். இதற்கு சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த புஸ்சி ஆனந்த் என்பவர் யார், அவருடைய பழக்க வழக்கங்கள் என்ன என்பது கூட தெரியாமல் அவரை நம்பும் விஜய், தன்னுடைய அப்பாவை கண்டு கொள்ளவில்லை என்பதுதான் பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

Also Read:தளபதி 68-க்கு ஆட்டம் காட்ட வரும் விடாமுயற்சி.. வட்டியும் முதலுமாக கொடுக்க தேதி குறிச்ச அஜித்

நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கும் பல பிரபலங்களும், உங்கள் குடும்பத்தின் பிரச்சினையே உங்களால் தீர்க்க முடியவில்லை, நீங்கள் எப்படி தமிழ்நாட்டை ஆளப்போகிறீர்கள் என்பது போன்ற கேள்வியை தற்போது விஜய்க்கு எதிராக பூதாகரமாக கிளப்பி வருகின்றனர். விஜய் அரசியல் என்று ஆரம்பிக்கும் பொழுதே இந்த பிரச்சினையை தான் இப்பொழுது அரசியல்வாதிகளும் அவருக்கு எதிராக எடுத்திருக்கிறார்கள்.

போதாத குறைக்கு இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஏ சந்திரசேகர் விஜயின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் வளர்ச்சிக்காக அவர் பட்ட கஷ்டங்களை நிறைய மேடைகளில் பேசி வருகிறார், திடீரென சீரியலிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். விஜய் கண்டு கொள்ளாமல் விட்டதால்தான் அவருடைய பெற்றோர்களுக்கு இந்த நிலைமை என்று அவர் மீது நெகடிவ் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

Also Read:விஜய்க்காக ரூட்டை மாற்றிய வெங்கட் பிரபு.. புது முயற்சியில் உருவாக்கும் தளபதி 68

Trending News