திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ படத்திலிருந்து கதாநாயகி விலகலா?. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா

தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்கும் பிரபலங்களின் விபரங்களை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டது.

அதன்படி கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு தெரிந்து மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஏனென்றால் தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளில் விஜய் மற்றும் திரிஷாவுக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது.

Also Read : மகிழை தூக்கிட்டு 11 வருடங்களுக்குப் பின் அஜித்துடன் இணையும் இயக்குனர்.. லியோவுக்கு ட்விஸ்ட் வைத்த ஏகே 62

ஆகையால் மீண்டும் இவர்கள் இணைவதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவதற்காக லியோ படக்குழு விமான மூலம் அங்கு சென்றது. மேலும் விமானத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அதில் விஜய்யுடன் திரிஷாவும் சென்றிருந்தார். ஆனால் இப்போது காஷ்மீரில் இருந்து திரிஷா புறப்பட்டு சென்னை வந்து விட்டாராம். இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது. மேலும் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகியதாகவும் செய்திகள் இணையத்தில் பரவியது.

Also Read : லியோ 100% என் படம்னு சொன்னதெல்லாம் பொய்யா.. செய்வதறியாமல் புலம்பும் லோகேஷ்

இப்போது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரிஷா தனது சமூக வலைத்தளத்தில் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தளபதி 67 உடன் திரிஷா 67 என்றும் பதிவிட்டுள்ளார். ஆகையால் திரிஷா லியோ படத்திலிருந்து விலகவில்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி காஷ்மீரில் அதிக குளிர் இருப்பதால் த்ரிஷா தன்னுடைய காட்சியை படப்பிடிப்பு நடத்தும் போது மட்டும் கலந்து கொள்ளலாம் என்ற முடிவில் அங்கிருந்து புறப்பட்டதாக அவர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. ஆகையால் மீண்டும் த்ரிஷா காஷ்மீர் விரைவில் செல்ல உள்ளாராம்.

Also Read : லியோ மட்டுமல்ல கைதி 2 ரிலீஸ் தேதியையும் முடிவு செய்த லோகேஷ்.. மீண்டும் மிரட்ட வரும் டில்லி

Trending News