வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் சேதுபதிக்கு ரஜினி கொடுத்த தரமான அட்வைஸ்.. ஓசில வேலை பார்த்தா காணாம போயிடுவ

Actor Vijay Sethupathi: தன்னுடைய ஸ்டைலால், தமிழ் சினிமாவில் மாபெரும் ஜாம்பவானாய் விளங்கும் சூப்பர் ஸ்டார் தற்பொழுது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதிக்கு கொடுத்த அட்வைஸ் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தன் ஆரம்ப காலத்தில் சினிமாவில் எதிர்பார்த்த கதாபாத்திரம் கிடைக்காமல் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் ஆக துவங்கியவர் தான் விஜய் சேதுபதி. காலம் கடந்து வந்த இவரின் வெற்றியை கொண்டாடும் விதமாக தற்பொழுது அடுத்தடுத்த படங்களில் நிற்க கூட நேரம் இல்லாமல் பிசியாக இருந்து வருகிறார்.

Also Read: அர்த்த ராத்திரியில் ரட்சிதா கணவன் செய்த மட்டமான வேலை.. போலீஸிடம் அளித்த பரபரப்பான புகார்

இவர் ஹீரோவாக இடம் பெற்று நகைச்சுவை உணர்வோடு கலக்கிய படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது. இருப்பினும் தன் வெற்றிக்கான சம்பள உயர்வை எதிர்பார்க்காமல் தன் அடுத்தடுத்த படங்களில் ஆர்வம் காட்டி வந்தார். சம்பளமாக லட்சத்தில் வாங்கியவர் தற்பொழுது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்.

இவரின் இத்தகைய மாற்றத்திற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எதார்த்தமான பேச்சு தான். தன்னுடைய முழு முயற்சியை போட்டு படம் எடுத்து அப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சம்பளத்தை எதிர்பார்ப்பதில் தப்பு ஒன்றும் இல்லை என்பதை கொண்டு இவர் தன் சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவை கிழித்து தொங்கவிட்ட மருமகள்.. ஊருக்கே விருந்து வைத்த ஜீவா

விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் வெற்றிக்கு முன் வரை சம்பளத்தை உயர்த்தாத விஜய் சேதுபதி, அப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்க சுமார் 10 கோடி கேட்டாராம். இதைத்தொடர்ந்து தான் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரமான பவானி கேரக்டரை ஏற்றாராம். தன் வெற்றியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இவர் சில படங்களில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து தற்பொழுது அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் பட்டியலில், பத்தாவது இடத்தை பிடித்துள்ள இவர் சுமார் 12 முதல் 15 கோடி வரை தன் சம்பளத்தை பெற்று வருகிறார். இருப்பினும் தன் தன்மையை விட்டுக் கொடுக்காமல் பட வாய்ப்பு இழந்து வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்.

Also Read: சண்டை காட்சிகள் இல்லாமல் மிகப் பெரிய வெற்றியடைந்த படங்கள்.. தந்தை மகள் பாசத்தில் அசத்திய பிரகாஷ்ராஜ்

Trending News