1980 ஆம் ஆண்டு ஜி. தியாகராசன் மற்றும் ஜி. சரவணன் என்பவர்களால் நிறுவப்பட்ட அந்த தயாரிப்பு நிறுவனம் தரத்தில் நம்பர் ஒன் நிறுவனமாக விளங்கி வருகிறது. கண்ணியத்திற்கு குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொண்ட இந்த தயாரிப்பு நிறுவனத்தின் இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென்று நீங்காத ஒரு இடம் பிடித்து வருகிறது
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மூன்றாம்பிறை, இதயம், ஹானஸ்ட் ராஜ், விசுவாசம், விவேகம் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தரமான படங்களை கொடுத்தனர். இவர்கள் திரைப்படங்களை மட்டுமல்லாமல் பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களையும், சன் டிவி தொடர்களான சுமங்கலி, திருமகள் உள்ளிட்ட நாடகங்களை தயாரித்து வெளியிட்டு அதிலும் தனி முத்திரை பதித்தனர்.
இந்த நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே குடும்ப கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். அதுமட்டுமின்றி அஜித்திற்காக விசுவாசம், விவேகம் போன்ற சென்டிமென்ட் கலந்த ஆக்சன் படங்களை கொடுத்து அனைத்து விதமான ஆடியன்ஸ்களையும் கவர்ந்தது.
சத்யஜோதி நிறுவனத்தின் முதல் படமான மூன்றாம் பிறை இன்று வரை மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து வருகிறது. கமலின் நடிப்பு இந்த படத்தில் பிரம்மாண்டமாக பேசப்பட்டது. பாலுமகேந்திரா இயக்கிய இந்த படம் நிறைய பாராட்டுகளை பெற்றது.
வளர்ந்து வரும் ஹீரோக்களையும், புதுமுக ஹீரோக்களையும் இந்நிறுவனம் நிறைய உதவிகளை செய்து அவர்களை ஊக்குவித்து பெரிய ஹீரோக்களாக வளர்த்து விட்டது என்பது மறுக்க முடியாத ஒன்று. இதற்கு உதாரணமாக பானா காத்தாடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களை கூறலாம். இந்த இரண்டு படங்களுமே அதர்வா மற்றும் வினய் ஆகிய இருவருக்கும் நல்லதொரு நடிகர் என்ற அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.
சின்னத்திரை என்று பார்க்கையில் இந்நிறுவனம் அங்கேயும் முத்திரை பதித்து பல வெற்றிகளை குவித்தது. சுமங்கலி மற்றும் திருமகள் நாடகம் மக்கள் மத்தியில் சக்கை போடு போட்டது. இப்பொழுது ஒரு பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்க திட்டம் தீட்டி வருகிறது சத்யஜோதி நிறுவனம் .