Sorgavaasal Trailer: ஆர் ஜே பாலாஜி இயக்கம் நடிப்பு என அடுத்தடுத்த நிலையை நோக்கி முன்னேறி வருகிறார். சூர்யாவின் 45 ஆவது படத்தின் இயக்குனர் என்ற பொறுப்பும் தற்போது இணைந்து இருக்கிறது.
இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் சொர்க்கவாசல் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன், நட்டி நடராஜ், கருணாஸ், சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இதன் டீசர் மிரட்டலாக இருந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிலும் ஆர் ஜே பாலாஜி வழக்கத்திற்கு மாறாக சீரியஸான கதாபாத்திரத்தில் இருப்பது புதுமையாகவும் உள்ளது.
வெளியானது ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் ட்ரெய்லர்
அதன்படி சிறைச்சாலையில் குற்றவாளிகளுக்கும் போலீசுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை என்பது வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது. அதில் இரு தரப்புக்கும் இடையே மாட்டும் ஆர் ஜே பாலாஜி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை கரு.
ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே நரகத்தில் இருப்பவனுக்கு சொர்க்கத்துக்கு போக சாவி இருக்குன்னு சொன்னா கண்டுபிடிக்காமயா இருப்பாங்க என்ற வசனத்தோடு தொடங்குகிறது. அதை அடுத்து உண்மையிலேயே இது சிறைச்சாலையா நரகமா என்னும் அளவுக்கு கலவரங்கள் நடக்கிறது.
நிஜத்தில் கூட இப்படித்தான் இருக்குமோ என்று கூட நம்மை ஒரு நிமிடம் யோசிக்க வைத்து விடுகிறது. அதில் ஆர் ஜே பாலாஜி ரத்த களரியாக நடிப்பில் வித்தியாசம் காட்டி இருக்கிறார். இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சொர்க்கவாசல் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.