ஆர் கே பாலாஜி இன்று ஒரு நடிகனாய் இந்த அளவிற்கு முன்னேற காரணமாக இருந்தவர் ஐசரி கணேஷ். பாலாஜியின் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களை தயாரித்தது ஐசரி கணேஷ்சின் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு எல்லா படங்களுமே ஓரளவு வசூலை குவித்து கொடுத்தது.
பாலாஜி மற்றும் ஐசரி கணேஷ் இருவருக்கும் மிக நெருங்கிய நட்பு உண்டு. மூக்குத்தி அம்மன் படம் இவர்களுக்கு நல்ல வசூலை கொடுத்த போதிலும் அந்தபடத்தின் இரண்டாம் பாகத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க முன்வரவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஆர் ஜே பாலாஜி போட்ட கண்டிஷன்கள் தான.
மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்பொழுது மாசாணி அம்மன் என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. இதை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஓனர் சுதன் தயாரித்து வருகிறார். நியாயப்படி பார்த்தால் முதல் பாகம் எடுத்த ஐசரி கணேசுக்கு தான் இவர் படம் பண்ணியிருக்க வேண்டும்.
கண்ணாடி தம்பி கொடுத்த பகிர் சாக்
ஆர் ஜே பாலாஜி போட்ட பல கண்டிஷன்கள் ஐசரி கணேசுக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு இருந்துள்ளது. மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்க அவர் கேட்ட சம்பளம் எட்டு கோடிகள். சம்பளத்தை கூட கொடுத்து விடலாம் என எண்ணிய அவருக்கு கண்ணாடி தம்பி மேற்கொண்டு பல கண்டிஷன்கள் போட்டு உள்ளார்.
மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் சேட்டிலைட் மட்டும் டிஜிட்டல் உரிமைகளையும் தனக்கே கொடுக்கும்படி கேட்டுள்ளார் பாலாஜி. இதனால் ஆடிப் போன ஐசரி கணேஷ் இந்த படத்தை நீங்கள் வேறு யாரையாவது வைத்து பண்ணிக் கொள்ளுங்கள் என்று ஜகா வாங்கியுள்ளார்.
- திரிஷாவின் மொத்த மானத்தையும் வாங்கிய சுச்சி லீக்ஸ்
- ஒரு இடத்துல சம்பாதித்ததை 9 இடத்தில் முதலீடு செய்யும் நயன்-விக்கி
- Nayanthara: குழந்தையை பங்கு போட்டுக் கொண்ட விக்கி, நயன் ஜோடி