திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தாராளமாய் கவர்ச்சி காட்டிய ராய் லட்சுமியின் 5 படங்கள்.. 34 வயதிலும் தமன்னாக்கு டஃப் கொடுக்கும் மில்க் பியூட்டி

ராய் லட்சுமி மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக தொடங்கிய இவரது வாழ்க்கை அதன் பின்னர் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் கிளாமர் ஹீரோயினாக தொடர்கிறது. பட வாய்ப்புகளே இல்லை என்றாலும் ராய் லட்சுமி அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் இந்த ஐந்து படங்களில் கொஞ்சம் ஓவராகவே கிளாமரும் காட்டியிருக்கிறார்.

நான் அவன் இல்லை-2: நடிகர் ஜீவன் நடிப்பில் ஏற்கனவே வெளியான நான் அவன் இல்லை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பக்கத்திலேயே குடும்ப பாங்காக நடித்து கொண்டிருந்த சினேகா போன்ற நடிககிகள் கவர்ச்சி காட்டியிருந்தார். இதில் இரண்டாம் பக்கத்தில் ராய் லட்சுமி ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியிருந்தார்.

Also Read:மேக்கப் போட்டு ஊரையே ஏமாற்றும் 40 வயசு தாய்க்கிழவி.. பார்க்க கூடாததை பார்த்து தெறித்து ஓடிய நடிகர்

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் ராய் லட்சுமி நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார். மகத் மற்றும் பிரேம்ஜி அமரனுடன் ஒரு சில காட்சிகளில் நடித்த இவர், கவர்ச்சியில் தாராளம் காட்டியிருந்தார்.

காஞ்சனா: நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் வெற்றி சீரிஸான காஞ்சனா முதல் பாகத்தில் ராய் லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். பேருக்கு தான் கதாநாயகி என்றாலும் படம் முழுக்க கவர்ச்சியில் பட்டையை கிளப்பியிருந்தார். காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்தன.

Also Read:பணத்தாசையால் வேறு தொழிலை செய்ய முடிவு எடுத்த நடிகை.. கடைசியில் பைனான்சியர் கொடுத்த அந்தரங்க டார்ச்சர்

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்: காஞ்சனா திரைப்படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அடுத்து தன்னுடைய இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என்னும் திரைப்படத்திலும் ராய் லட்சுமிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். நடிகை பத்மப்ரியா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க, ராய் லட்சுமி கவர்ச்சி நடிகையாக நடித்திருந்தார்.

தி லெஜன்ட் : சரவண அருள் நடித்த தி லெஜன்ட் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரத்துல்லா ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்தில் வாடிவாசல் என தொடங்கும் பாடலுக்கு நடிகைகள் யாஷிகா ஆனந்த் மற்றும் ராய் லட்சுமி இருவருமே கிளாமரில் போட்டி போட்டு நடித்திருந்தார்கள்.

Also Read:பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

 

Trending News