வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எல்லை மீறிய லிப் லாக் காட்சியில் ராசி கன்னா.. என்னது விஜய் சேதுபதியும் இதுக்கு உடந்தையா

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை ராசி கன்னா. இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாலிவுட்டிலும் ராசி கன்னா சில படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் ஹாலிவுட் சினிமாவில் தான் எல்லை மீறிய காட்சிகள் வைக்கப்படும். அந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது தமிழ் சினிமாவிலும் வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நடிகை ராசி கன்னா லிப் லாக் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.

Also Read : பரட்டைத் தலையுடன், கவர்ச்சி போட்டோஷூட்க்கு ஒத்திகை பார்க்கும் ராசி கன்னா!

அதாவது விஜய் சேதுபதி, ஷாகித் கபூர், ராசி கன்னா நடிப்பில் ஃபர்சி என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மிக மோசமான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் சென்சாரில் ஏ சர்டிபிகேட் தான் இந்த வெப் சீரிஸிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு தொடரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறாரா என்பதே ஆச்சரியமாக இருந்தது.

இந்நிலையில் ஃபர்சி வெப்சீரிஸில் ஷாகித் கபூருடன் ராசி கன்னா லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி படத்தில் படுமோசமான வசனங்களும் இடம் பெற்று இருந்தது. பெரும்பாலும் அடக்க ஒடக்கமான கதாபாத்திரங்களில் நடித்த ராசி கன்னாவா இது என்பது போல இத்தொடரில் நடித்திருந்தார்.

Also Read : மிரட்டும் பீட்சா 3.. விஜய் சேதுபதியை ஓரம் கட்டுவாரா அஸ்வின்?

பொதுவாக இது போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார். ஏனென்றால் ஆரம்பத்தில் 96 படத்தில் இயக்குனர் ஒரு லிப் லாக் காட்சி வைக்கலாம் என்று கூறியுள்ளார். அப்போதே விஜய் சேதுபதி இது தேவையில்லாத ஒன்று, படம் மொத்தமாக சொதப்பி விடும் என்று இயக்குனரிடம் கேட்டுக் கொண்டாராம்.

அப்படி இருந்த விஜய் சேதுபதி இப்போது பணத்திற்காக இது போன்ற மோசமான வெப் சீரிஸில் நடித்தாரா என ரசிகர்கள் வினவி வருகிறார்கள். மேலும் நடிகர்கள், நடிகைகள் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க சம்மதிப்பதால் தான் தற்போது தமிழ் சினிமா கலாச்சாரத்தை மீறி பல விஷயங்களை கொண்டு வந்துள்ளது.

Also Read : விஜய் சேதுபதி அதிக படங்களில் நடிப்பதற்கான முக்கிய காரணம் இதுதான்.. இவரைப் போய் தப்பா நினைச்சுட்டோமே!

Trending News