வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அர்த்த ராத்திரியில் ரட்சிதா கணவன் செய்த மட்டமான வேலை.. போலீஸிடம் அளித்த பரபரப்பான புகார்

Actress Rachitha Mahalakshmi: சின்னத்திரை சீரியல்களில் பிரபலமாக இருப்பவர் தான் ரட்சிதா மகாலட்சுமி. அதிலும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை வேறொரு கோணத்தில் காட்டியது. இந்நிலையில் இவர் தன்னுடைய கணவர் மீது போலீசில் பரபரப்பான புகார் கொடுத்திருப்பது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

வழக்கம் போல விஜய் டிவி சீரியல்களில் நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் தான் தினேஷ், ரட்சிதா ஜோடி. கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் திடீர் கருத்து வேறுபாட்டால் இப்போது தனித்தனியாக இருக்கின்றனர்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவை கிழித்து தொங்கவிட்ட மருமகள்.. ஊருக்கே விருந்து வைத்த ஜீவா

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இவர்கள் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்று கூறினாலும் ரட்சிதா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக செய்திகளும் கிளம்பியது. ஆனால் தினேஷ் தன் மனைவியுடன் இணைந்து வாழும் முடிவில் தான் இருக்கிறார் என்பது பலமுறை அவர் கொடுக்கும் பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிந்தது.

இந்த சூழலில் தான் தினேஷ் மீது அவர் இப்படி ஒரு புகாரை கொடுத்திருக்கிறார். அதாவது தன் கணவர் தன்னை அர்த்தராத்திரியில் போன் செய்து மிரட்டுவதாகவும், அருவருப்பாக இருக்கும் படியான மெசேஜை தொடர்ந்து அனுப்பி வருவதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Also read: பிக் பாஸில் வந்த பிறகு சீரியல் வாய்ப்பும் பறிபோனதா? உண்மையை உடைத்த ரட்சிதா

இது பல நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில் தான் நேற்று நள்ளிரவு அவர் மாங்காடு காவல் நிலையத்தில் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட தினேஷ், ரட்சிதா விவாகரத்து வாங்க வேண்டும் என்று விரும்பினால் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து போலீசார் ரட்சிதாவிடமும் இந்த புகார் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை பிரிந்து பல மாதங்கள் ஆன பிறகும் ரட்சிதா எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது தான் தினேஷின் இந்த செயலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த அளவுக்கு அவர் மட்டமாக இறங்கி இருப்பாரா என ரசிகர்கள் இந்த விவகாரம் குறித்து தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Also read: சீரியல் நடிகைகளை திருமணம் செய்வதே தவறு.. மீனாட்சியின் சுயரூபத்தை புட்டு புட்டு வைத்த செந்தில்

Trending News