செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விவாகரத்தை பற்றி வெளிப்படையாக பேசிய தினேஷ்.. சர்ச்சைகளுக்கு மறைமுகமாக பதிலளித்த ரட்சிதா

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன்பிறகு கலர்ஸ் தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வந்தார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். ஆனால் ரட்சிதா தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தினேஷும் ரஞ்சிதாவும் திருமணத்திற்கு பிறகு நாச்சியார் எனும் சீரியலில் ஒன்றாகவும் நடித்தனர்.

மேலும் ரட்சிதாவிற்கு சீரியல் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் தினேஷிற்கு சீரியல் நடிப்பதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை என்பதுதான் இவர்கள் இருவருக்கும் சண்டை வருவதற்கு காரணம் எனக் கூறிவந்தனர்.

அதன் பிறகு இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். பின்பு இருவரும் தனித்தனியாக அவர்களது வீட்டிற்கு சென்றனர். ஆனால் இவர்களது பெற்றோர்கள் இவர்களை சேர்த்து வைப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டனர்.

தினேஷ் விவாகரத்து பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் பிரச்சினை இருக்கிறது ஒரு சிலர் வீட்டிலேயே இருந்து பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள், ஒரு சிலர் தனித்தனியாக பிரிந்து இருக்க விரும்புவார்கள் அப்படி தான் நாங்கள் இருவரும் கொஞ்ச நாள் பிரிந்து இருக்கலாம் என்பதற்காக பிரிந்துள்ளோம் என கூறினார்.

ஆனால் இது நிரந்தரமான பிரிவு கிடையாது மேலும் விவாகரத்து செய்வதற்காக நாங்கள் இருவரும் எந்த ஒரு முயற்சியும் தற்போது வரை ஈடுபடவில்லை என கூறினார். அதனால் இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்கள் என கூறி வருகின்றனர்.

Trending News