Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரட்சிதா விவாகரத்து பெற இந்த விஷயம்தான் காரணமா.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

சின்னத்திரையில் பிரபல நடிகையான ரட்சிதா மஹாலட்சுமி தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே இவருக்கும் இவரது கணவர் தினேஷ் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விவாகரத்து செய்ய போகிறார் என்ற தகவல் தற்போது […]

சின்னத்திரையில் பிரபல நடிகையான ரட்சிதா மஹாலட்சுமி தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே இவருக்கும் இவரது கணவர் தினேஷ் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விவாகரத்து செய்ய போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகமான ரட்சிதா மகாலட்சுமி இந்த சீரியலுக்கு பின் ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார். மேலும் நடிகர் தினேஷ் என்பவரை 2012 ஆம் ஆண்டு காதலித்து ரச்சித்தா மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். இதனிடையே இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லாத காரணத்தால் தினேஷ் மனமுடைந்து உள்ளார் என்று செய்தி வெளியானது.

மேலும் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் ரட்சிதா மகாலட்சுமிக்கு சீரியல் வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது. இதனால் இவர்கள் இருவருக்கும் மனரீதியாக சண்டைகள் உருவானதையடுத்து இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இவர்களின் பிரிவை அறிந்த இவர்களது பெற்றோர்கள் எப்படியாவது அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது குடும்பத்தில் பேசிக்கொண்டு வருகிறார்களாம். ஆனால் ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரட்சிதா மகாலட்சுமி சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு குடும்பத்தில் கவனம் காட்டினால் குழந்தை பெற்றுக்கொண்டு நன்றாக வாழலாம் என்பதே தினேஷின் கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் ரச்சித்தா மகாலட்சுமி தன் நடிப்பு திறமையை விட்டுவிட முடியாது என்பதில் தீர்மானமாக உள்ளாராம். இதுவே இவர்களின் பிரிவிற்கு முக்கியமான காரணமாக உள்ளது என சின்னத்திரை வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளித்திரையில் பிரபல நடிகர் நடிகைகளின் விவாகரத்து செய்தி தலைதூக்கி வரும் நிலையில, தற்போது சின்னத்திரையிலும் இதுபோன்ற விவாகரத்து சம்பவங்கள் நடைபெறுவதால் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்து ஒன்றாக வாழவேண்டும் என்பதை இவர்கள் ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரின் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.