சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராதா மோகனின் 5 ஃபீல் குட் ஃபிலிம்ஸ்.. ஜோவை வேறு ஒரு பரிமாணத்தில் மாற்றிய இயக்குனர்

Actress Jyothika: நல்ல கருத்துள்ள படங்களை எந்த ஒரு பிரம்மாண்டமும் இல்லாமல் இயக்கி வெற்றி கொண்டாடும் இயக்குனர் தான் ராதா மோகன். சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியையும் மற்றும் நடைமுறையில் எதிர்கொள்ளும் சம்பவத்தையும் தன் படங்களின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

அவ்வாறு இவரின் கதைக்காகவே வெற்றி கண்ட படங்கள் ஏராளம். மேலும் தான் இயக்கிய படங்களின் மூலம் சிறந்த இயக்குனர் விருதையும் பெற்றவர். அவ்வாறு இவரின் படைப்பில் பெரிதும் பேசப்பட்ட 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: பட ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப்போரா.. கமலை அவமதித்த இயக்குனர், பதட்டத்தில் உதயநிதி

அழகிய தீயே: 2004ல் பிரசன்னா, நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் நடித்து வெளிவந்த படம் தான் அழகிய தீயே. எதார்த்தமான காதலையும், ஆசையையும் மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டு இருக்கும். இப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களை பெற்று தந்தது. இருப்பினும் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. இப்படம் ஹேப்பி என்று தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

மொழி: 2007ல் ஜோதிகாவின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெற்றி கண்ட படம் தான் மொழி. காது கேட்காமல் மற்றும் ஊமை கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் ஜோதிகா. இவரின் குறை தெரியாமல் மேற்கொள்ளும் காதலை மையமாகக் கொண்டு நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்ட இப்படம் ஜோதிகாவின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாகும்.

Also Read: கட்டுமஸ்தான நடிகரின் கண்ட்ரோலில் இருக்கும் விஜய் பட நடிகை.. டாப் ஹீரோவுக்கு வச்ச ஆப்பு

அபியும் நானும்: 2008ல் திரிஷா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ராதா மோகன் படைப்பில் இதுவும் ஒன்றாகும். பருவம் அடையும் பெண் குழந்தையின் பிரிவை தாங்க முடியாமல் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் சிறப்புற நடித்திருப்பார். இப்படம் விமர்சனம் ரீதியான பாராட்டையும் பெற்று விருதுகளை வென்றது.

காற்றின் மொழி: 2018ல் ஜோதிகாவின் மாறுபட்ட பரிமாணத்தில் வெளிவந்த படம் தான் காற்றின் மொழி. இப்படத்தில் இல்லத்தரசி கதாபாத்திரத்தில் ஜோதிகா சிறப்புற நடித்திருப்பார். மேலும் இல்லத்தரசிகளின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாக இவர் மேற்கொள்ளும் செயல்கள் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.

Also Read: கமலை வைத்துக்கொண்டே தேவர் மகன் சாதிய படம் என கூறிய மாரி செல்வராஜ்.. வெடிக்கும் சர்ச்சை

60 வயது மாநிறம்: 2018ல் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் 60 வயது முதுமையை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். இப்படம் மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் பிரகாஷ்ராஜின் எதார்த்தமான நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

மேலும் ராதா மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ரொமான்டிக் திரில்லர் படம் தான் பொம்மை. எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்த இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.

Also Read: ரீமேக் என்ற பெயரில் படும் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. சிம்புவால் காணாமல் போன தயாரிப்பாளர்

Trending News