Vijayakanth: விஜயகாந்த், ஒரு நடிகராக, அரசியல்வாதியாக தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு மறைந்திருக்கிறார்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை ஒட்டி பலரும் தங்களுடைய சுவாரசியமான தருணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
அப்படி அவருடைய நெருங்கிய நண்பர் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் விஜயகாந்த் மற்றும் கமலஹாசனின் இடையே நடந்த ஒரு சிறு சலசலப்பு பற்றி பேசி இருக்கிறார்.
இன்னைக்கு எல்லோருமே வளர்ந்த நடிகர்கள், வயது மற்றும் மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் எல்லோருமே இளவட்டங்கள் தான்.
இவர்களுக்குள் சண்டை சச்சரவு வந்திருப்பது என்பது சாதாரண விஷயம் தான்.
அப்போதைய காலகட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேரணி ஒன்று நடந்திருக்கிறது.
விஜயகாந்த் அப்போது சினிமாவிற்கு வந்த போது. அவருக்கென்று ராதாரவி, வாகை சந்திரசேகர், SSR என ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்திருக்கிறது.
இவர்கள் அந்த பேரணியின் போது ஜாலியாக சிரித்து பேசிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை காந்திமதியும் சிரித்து பேசிக்கொண்டு, நடனம் ஆடிக் கொண்டே இருந்திருக்கிறார்.
அப்போது கமல் அங்கே சட்டென வந்து காந்திமதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டாராம். இது விஜயகாந்திற்கு மனதிற்கு நெருடலாக இருந்திருக்கிறது.
உடனே அவரும் அவருடைய நண்பர்களும் ஆட்டோ பிடித்து ரோகினி தியேட்டருக்கு போய் விட்டார்களாம். அதன் பின்னர் தானும் இதே மாதிரி ஒரு பேரணியை நடத்திக் காட்ட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
இரண்டு முறை விஜயகாந்த் தலைமையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேரணி நடந்ததாகவும் ராதாரவி கூறி இருக்கிறார்.