Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவின் அம்மா கொடுத்த புகாரை விசாரிக்கும் விதமாக போலீஸ் ஸ்டேஷன்லிருந்து ஈஸ்வரியை அரெஸ்ட் பண்ணுவதற்காக பாக்யா வீட்டுக்கு வருகிறார்கள். அங்கே வீடு முழுவதும் சோதனை போட்ட பிறகு ஈஸ்வரி எங்கே என்று விசாரித்த நிலையில் கும்பகோணத்திற்கு பாட்டி போயிருக்கிறார்கள் என்று எழில் மற்றும் செழியன் சொல்கிறார்கள்.
உடனே போலீஸ் அங்க போய் அரெஸ்ட் பண்ணிட்டு வரணும் என்று சொல்லிய நிலையில் செழியன் நாளைக்கு அவர்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். யார் என்ன கம்பளைண்ட் எங்க பாட்டி மேல கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு போலீஸ், ராதிகாவின் அம்மா பெயரை சொல்லி இவர்கள்தான் என் மகளுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை செய்ய முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று புகார் கொடுத்ததாக சொல்கிறார்கள்.
ஈஸ்வரியை காப்பாற்ற ஒன்று சேரும் பாக்கியா கோபி
இதைக் கேட்டு அதிர்ச்சியான பாக்யா குடும்பத்தில் உள்ளவர்கள் பாக்யாவிற்கு ஃபோன் பண்ணி தகவல்களை சொல்கிறார்கள். உடனே பயத்தில் பாக்கியா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அனைவரையும் ஊருக்கு கூட்டிட்டு வருகிறார். கூட்டிட்டு வரும்போது பாக்கியா இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டே வருகிறார்.
பிறகு வீட்டிற்கு வந்தது அனைவரும் முகமும் வாடி இருப்பதே ஈஸ்வரி நோட் பண்ணுகிறார். பிறகு என்ன என்று கேட்கும் பொழுது நடந்த விஷயங்கள் ஈஸ்வரிக்கு தெரிய வரப்போகிறது. ஏற்கனவே ஒரு குற்ற உணர்ச்சியில் இருந்த ஈஸ்வரிக்கு இந்த ஒரு விஷயம் மிகப்பெரிய அதிர்ச்சியாக விழப்போகிறது. இதற்கிடையில் ராதிகா அம்மா போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தை ராதிகாவிடம் சொல்லிவிடுகிறார்.
இதைக் கேட்டு ஏன் இந்த மாதிரி வேலையை பார்த்த என்று ராதிகா முதலில் கேட்கிறார். பிறகு கமலா, அந்த குடும்பம் இருக்கும் தைரியத்தில் தானே கோபி உன்னிடம் சண்டை போடுகிறார். அதனால் ஈஸ்வரிக்கு ஒரு தண்டனை கிடைத்தால் மட்டும்தான் கோபி திருந்துவார். பழையபடி உன்னுடன் இருப்பார் என்று ராதிகாவை சமாதானப்படுத்தி விடுகிறார்.
உடனே ராதிகாவும் அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு மாமியாருக்கு எதிராக வாக்குமூலம் சொல்ல தயாராகி விட்டார். இதை எல்லாம் அறிந்த கோபி அதிர்ச்சியில் ராதிகா மற்றும் அவருடைய அம்மாவிடம் சண்டை போடுகிறார். ஆனாலும் ராதிகா, அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு கோபி சொல்வது எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ஜெயிலுக்குப் போகி அந்த கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது. எப்படியாவது மாமியாரை காப்பாற்ற வேண்டும் என்று பாக்கியா ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப் போகிறார்.
இதற்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கோபி, பாக்கியா உடன் இணைந்து அம்மாவை காப்பாற்றப் போகிறார். ஆக மொத்தத்தில் இந்த ஒரு விஷயத்தில் பாக்கியாவின் குணமும் ராதிகாவின் கேரக்டரும் என்னவென்று கோபிக்கு புரிந்துவிடும். கடைசியில் கோபி, ராதிகாவே வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலைமைக்கு போகப் போகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்
- ராதிகாவின் அம்மாவை மிரட்டிய கோபி
- மாமியார் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கும் ராதிகாவின் அம்மா
- ஈஸ்வரியை தவறாக பேசிய மாமியாரை அடிக்க கை ஓங்கிய கோபி