Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

லண்டன் இசைக்கலைஞரால் கர்ப்பமான கபாலி பட நடிகை.. வெளிப்படையாக கொடுத்த போஸ்

லண்டன் இசைக்கலைஞரால் கர்ப்பமான கபாலி பட நடிகை.. வெளிப்படையாக கொடுத்த போஸ்

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த ‘தோனி’ படத்தின் மூலம் அறிமுகமானார். கபாலி படத்தில் நடித்ததன் […]

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த ‘தோனி’ படத்தின் மூலம் அறிமுகமானார். கபாலி படத்தில் நடித்ததன் மூலம், மிகவும் பரிச்சயமானார்.

ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார். அவ்வப்போது, இவர் போடும் photo-கைகளால் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர். மேலும் நிர்வாணமாக நடித்து அனைவருக்கு அட்டாக் வர வைத்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் சில நேரங்களில் இவர் பேசும் சர்ச்சை கருத்து, அனைவரையும் அதிர வைக்கும். அப்படி, பல நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்களென நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்ததும் சர்ச்சையானது.

கர்ப்பமான பாலிவுட் நடிகை

ராதிகா ஆப்தே, வயலின் இசைக்கலைஞரான பெனடிக்ட் டெய்லரை 2012ல் திருமணம் செய்தார். 2011ல் லண்டனில் நடனம் பயிலச் சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் 2012ல் இருந்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ராதிகா ஆப்தே லண்டனில் குடியேறியதாகவும் தகவல் வந்தது. லண்டன், மும்பை என்று படங்களுக்காக சுற்றி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிடாமல் இருந்த ராதிகா ஆப்தே தற்போது தனது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ராதிகா ஆப்தே நடித்திருக்கும் சிஸ்டர் மிட்நைட் எனும் படம் லண்டனில் நடைபெறும் பிஎப்ஐ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. அப்போது தான் கர்பம் தரித்த தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Radhika-Apte

தற்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நிறைமாத நிலவே வா வா என்று பாடலையும் போட்டு வருகிறார்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.