Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், என்ன தான் கோபி, பாக்யாவிற்கு துரோகம் பண்ணி குடும்பத்தை விட்டு ராதிகா பின்னாடி போயிருந்தாலும் அம்மா மீதும் பிள்ளைகள் மீதும் இருந்த பாசம் மட்டும் குறையவே இல்லை. அதனால் தற்போது தன் அம்மாவின் நிலைமைக்கு தானும் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் புலம்பித் தவிக்கிறார்.
அதிலும் தன்னுடைய அம்மா ஜெயிலில் இருப்பதற்கு முக்கிய காரணம் ராதிகா, அவருடைய அம்மா பேச்சை கேட்டுக் கொண்டு ஈஸ்வரிக்கு எதிராக கம்பளைண்ட் கொடுத்தது தான். அதனால் ஒட்டுமொத்த கோபத்துடன் வீட்டிற்கு வந்து ராதிகாவையும் மாமியாரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா நாங்கள் ஏன் போக வேண்டும் என்று திமிராக பேசுகிறார்.
பாக்யாவுடன் சேர்ந்த மயூ
அப்பொழுது கோபி அவர்களிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார். அந்த நேரத்தில் மயூ வந்ததால் கோபி சைலன்டாகி விட்டார். அத்துடன் மயூ என்னுடைய குழந்தை, அவள் என்னுடன் இருக்கட்டும் நீங்கள் இரண்டு பேரும் வெளியே போங்கள் என்று சொல்கிறார். அதற்கு கோபியின் மாமியார், ஆடு பகை குட்டி உறவா? இது எந்த விதத்தில் நியாயம் என்று சொல்லி மயூ மற்றும் ராதிகாவை வீட்டிற்குள் கூட்டிட்டு போய்விடுகிறார்.
இதனை அடுத்து ஈஸ்வரியை நினைத்து பாக்கியா குடும்பத்தில் உள்ளவர்கள் கவலையில் இருக்கிறார்கள். அப்போது மாமனாரை சமாதானப்படுத்திய பாக்யா நீங்கள் அனைவரும் கோர்ட்டுக்கு போங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது நான் முடித்துவிட்டு நேரடியாக கோர்ட்டுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லுகிறார். வீட்டில் இருந்து பூஜை செய்து சாமி கும்பிட்டு அனைவரும் கோர்ட்டுக்கு போகிறார்கள்.
அங்கே தாத்தா மற்றும் பேரன்கள் அனைவரும் ஈஸ்வரிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கோபியும் வருகிறார். கோபியை பார்த்த தாத்தா வழக்கம்போல் கோபியை திட்டுகிறார். உடனே ராதிகா மற்றும் அவருடைய அம்மாவும் அங்கே வந்து விடுகிறார்கள். பிறகு ஈஸ்வரி உடைய கேஸ் வாதாடுவதற்கு நேரம் வந்துவிட்டது. அப்பொழுது பாக்யாவை காணுமே என்று அனைவரும் பதற்றுத்துடன் இருக்கிறார்கள்.
ஆனாலும் ஈஸ்வரி நீதிமன்றத்துக்குள் போயி கூண்டில் நின்னு லாயர் மறுபடியும் விசாரணை செய்து வருகிறார். ஆனால் எந்தவித சாட்சியும் இல்லாததால் ஈஸ்வரிக்கு தண்டனை கொடுக்கும் விதமாக நீதிபதி அறிவிப்பு கொடுக்கப் போகிறார். ஆனால் அந்த நேரத்தில் பாக்யா, பழனிச்சாமி மற்றும் லாயர், மயூவை கூட்டிட்டு வருகிறார்கள்.
ஆரம்பத்தில் மயூ என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த பொழுது கோபி காட்டின அன்பையும் பாசத்தையும் உணர்ந்து கொண்டு, ஈஸ்வரி பாட்டி மீது எந்த தவறும் இல்லை என்பதினால் உண்மையை சொல்வது தவறு இல்லை என்பதை புரிந்து கொண்டு பாக்கியவுடன் வந்து விடுகிறார். அப்படி கோர்ட்டுக்கு வந்த மயூ கூண்டில் ஏறி வீட்டில் நடந்த விஷயத்தை தெள்ளத் தெளிவாக சொல்லப் போகிறார்.
அதன் பிறகு தான் ராதிகாவுக்கு புரியப் போகிறது ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை. அம்மா தான் இவ்வளவு சூழ்ச்சியும் பண்ணியிருக்கிறார் என்று. ஆனால் அது தெரியாமல் ஆடிய ஆட்டத்திற்கும் காட்டிய திமிருக்கும் முடிவு கட்டும் விதமாக மயு சொன்ன சாட்சி ராதிகா வாழ்க்கையை கேள்விக்குறியாகிவிட்டது. இனியும் கோபி ராதிகாவுடன் சேர்ந்து வாழ்வது கஷ்டம் தான். ஆனாலும் பாக்கியாவுடனும் சேர முடியாமல் பண்ணுன தவறுக்கும் செய்த பாவத்திற்கும் யாரும் இல்லாமல் தனியாக நிற்க போகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பாக்யாவிற்காக ராதிகாவிற்கு எதிராக திரும்பும் மயூ
- ஈஸ்வரியை காப்பற்ற பாக்கியாவுக்கு உதவும் ராதிகாவின் மகள்
- ஆக்ரோஷமாக மாமியாரின் கழுத்தை நெறித்த கோபி