Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி எனக்கு வேண்டாம் அவருடன் சேர்ந்து இருப்பதும் ஒன்னு, தனியாக வாழ்வதும் ஒன்னு தான் என்று ராதிகா முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் கோபியை விட்டு சட்டரீதியாக போக வேண்டும் என்பதால் விவாகரத்து நோட்டீசை அனுப்பி வைத்தார். இந்த விஷயம் கோர்ட்டுக்கு வந்த நிலையில் கோபி மற்றும் ராதிகா வந்துவிட்டார்கள்.
ஆனால் கோர்ட்டுக்குள் போவதற்கு முன் கோபி, ராதிகாவை பார்த்து பேசுகிறார். நீயும் நானும் எந்த அளவுக்கு காதலிச்சு எவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணத்தை பண்ணினோம். எல்லா விஷயத்தையும் நாம் இரண்டு பேரும் முடிவு எடுத்த நிலையில் இதை மட்டும் எப்படி நீ தனியாக முடிவெடுக்க முடியும். நீ இல்லாமல் நான் என்ன பண்ணுவேன் எப்படி இருப்பேன் என்று யோசித்து பார்த்தியா?
என்னை பற்றி உனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லையா என்று ராதிகாவின் மனசை மாற்றுவதற்கு கோபி சென்டிமென்டாக பேசி மொத்தமாக பீல் பண்ணி விட்டார். அதற்கு ராதிகா கொடுத்த ஒரே பதிலடி உங்களுக்கு என்னை விட உங்க குடும்பம் தான் ரொம்ப முக்கியம். அங்கு இருந்தால் தான் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருப்பீங்க. உங்களை நினைச்சுட்டு நான் ஒவ்வொரு நாளும் வேதனை தான் பட வேண்டியதாக இருக்கும்.
அதற்கு நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி உங்க குடும்பத்துடன் இருங்கள் நான் எனக்கு பிடித்த வாழ்க்கையை என் மகளுடன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி கோர்ட்டுக்குள் போய்விடுகிறார். ஆனால் கோபிக்கு ஒரு நம்பிக்கை நம் இவ்வளவு தூரம் பேசியதால் நிச்சயம் ராதிகா நம்மளை விட்டுப் போக மாட்டாள். அதனால் விவாகரத்து நோட்டீஸ் வேண்டாம் என்று ஜட்ஜு கிட்ட சொல்லிடுவார் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் உள்ளே போனதும் ராதிகா நான் எடுத்த முடிவில் தீர்மானமாக இருக்கிறேன். எனக்கு விவாகரத்து நோட்டீஸ் வேண்டும் என்று கேட்ட நிலையில் கோபி நம் இவ்வளவு தூரம் பேசிய நிலையிலும் ராதிகா மனசு மாறவே இல்லை என்று அதிர்ச்சியாகிவிட்டார். பிறகு கோபி எதுவும் சரியான பதிலை கொடுக்காததால் ஜட்ஜ் மறுபடியும் ஒரு சான்ஸ் கொடுக்கிறேன் என்று இந்த கேசை தள்ளி வைத்திருக்கிறார்.
பிறகு வெளியில் வந்ததும் ராதிகாவிடம் கெஞ்சாத குறையாக கோபி மன்றாடுகிறார். ஆனால் ராதிகா, எனக்கு ஒரு நல்லது பண்ண வேண்டும் என்று நினைத்தால் அடுத்த முறை வரும்பொழுது தயவு செய்து விவாகரத்து நோட்டீசை கொடுத்து விடுங்கள். என்னால மயூவை பெங்களூரில் விட்டு அடிக்கடி சென்னைக்கு வந்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் கோபியால் திருப்பி எதுவும் பேச முடியாமல் அமைதியாகி விடுகிறார். பிறகு அந்த இடத்திற்கு பாக்யா வந்த நிலையில் ராதிகா மற்றும் பாக்கிய இருவரும் சேர்ந்து இதைப் பற்றி பேசி கொள்கிறார்கள். இவர்கள் பேசுவதை பார்த்த கோபி இதே கோர்ட்டுக்கு பாக்யாவுக்கு துரோகம் பண்ணும் விதமாக பாக்கியாவுக்கே தெரியாமல் விவாகரத்து செய்ததை நினைத்து விட்டு போய்விட்டார்.
இதுதான் கர்மா என்று சொல்வார்கள் முன்வினை செய்த பாவம் நமக்கு வந்து அடையும் என்பதற்கு ஏற்ப கோபி, பாக்யாவுக்கு செஞ்ச துரோகத்திற்கு தற்போது ராதிகா பதிலடி கொடுத்து விட்டார். ராதிகாவும் வேணும் பாக்கியாவும் வேணும் என்று நினைத்த கோபிக்கு கடைசியில் இரண்டு பொண்டாட்டியும் இல்லாமல் அவஸ்தைப்படும் நிலைமையாகி விட்டது.
இதனை தொடர்ந்து எழில் அவருடைய முதல் படத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில் இசை வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தயாராகி விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்த நிலையில் ராதிகாவையும் பாக்யா கூப்பிட்டு இருக்கிறார். அதனால் ராதிகா வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ராதிகாவை பார்த்த கோபி லவ் பெயிலியர் பார்த்த பசங்க மாதிரி ராதிகாவை நினைத்து பீல் பண்ணுகிறார்.