Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி நினைத்தபடி கோபியை கோவிலுக்கு கூட்டிட்டு போய் விட்டார். அங்கே அப்பாவுடன் இருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் இனியா மற்றும் செழியன் இருக்கிறார்கள். மேலும் இனியாவை பெருமையாக பேசிக் கொள்ளும் கோபியிடம் ஈஸ்வரி நீ எப்போதும் இப்படியே நம்ம குடும்பத்துடன் இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் நீயும் சந்தோசமாக இருக்க முடியும், நாங்கள் அனைவரும் நிம்மதியாக இருப்போம் என ஈஸ்வரி சொல்கிறார். அந்த சமயத்தில் இனியா, கோவிலை காட்டும் விதமாக பாக்யாவிற்கு வீடியோ கால் பண்ணுகிறார். பாக்யா. இனியாவிடம் பேசிய பிறகு கோபியிடம் போன் கொடுக்க சொல்கிறார். ஆனால் இனியா என்ன திடீரென்று அப்பாவிடம் பேசணும்னு சொல்ற, ஒரே வீட்டில் இருக்கும் போது கூட நீ பேசாம இருந்தாய் இப்ப என்ன பேசணும் என்று கேட்கிறார்.
அதற்கு பாக்கியா, ராதிகா வீடு காலி பண்ணி போகிறார். அதைப்பற்றி உங்க அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். உடனே இனியா, அப்பா இப்பொழுது இங்கே இல்லை என்று பொய் சொல்லி போனை வைத்து விடுகிறார். அதன் பிறகு பாக்யா செழியனுக்கு போன் பண்ணி பார்க்கிறார். செழியனும் போன் எடுக்கவில்லை. ஏனென்றால் இனியா அதற்கு முன் ஈஸ்வரிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டார்.
உடனே ஈஸ்வரி இதுதான் சான்ஸ் கோபியை நம்முடன் வைத்துக் கொள்வதற்கு. அதனால் ராதிகாவை பற்றி எந்த உண்மையும் இப்போதைக்கு கோபிக்கு தெரிய வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்லி விடுகிறார். இதனை அடுத்து ராதிகா பொருட்களை எல்லாம் புது வீட்டுக்கு அனுப்பிய பிறகு மயுவையும் அம்மாவையும் புது வீட்டுக்கு காரில் அனுப்பி வைக்கிறார்.
பிறகு ராதிகா யாருமே இல்லாமல் அந்த வீட்டில் தனியாக படுத்துக் கொண்டு பீல் பண்ணுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாக்கியா, ராதிகாவிற்கு சாப்பாடு எடுத்துட்டு போகிறார். பிறகு ராதிகாவிடம் பழைய நட்பை நீடிக்கும் விதமாக மனம் விட்டு பேசுகிறார். ராதிகாவும் நாம் இருவரும் பழைய மாதிரி நட்பு ரீதியாகவே இருந்திருக்கலாம்.
எவ்வளவு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம் என்று சொல்லி சினேகிதியாக பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்த கோபியை நம்பி பாக்கியா மட்டும் கஷ்டப்படவில்லை ராதிகாவும் நிம்மதி இல்லாமல் தான் பரிதவித்து வருகிறார். ஆனால் எல்லா தப்பையும் பண்ணிக்கிட்டு இப்பொழுது எதுவுமே நடக்காத மாதிரி அம்மா பின்னாடி ஒளிஞ்சிகிட்டு கோபி புதுசா ஒரு வாழ்க்கையை வாழ நினைக்கிறார்.