Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியாவின் இரண்டு மகன்களின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் மொத்த குடும்பமும் பரிதவித்து இருக்கிறார்கள். அதிலும் அமிர்தாவின் முன்னாள் கணவர் உயிரோடு வந்து பிரச்சனை செய்ததால் அதற்கு என்ன தீர்வு காண்பது என்று தெரியாமல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பாக்யாவிற்கு ஆறுதலாக கோபி எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கலாம். நீ எதை நினைத்தும் கவலைப்படாதே என்று சொல்கிறார். அத்துடன் அமிர்தாவிற்கு தேவையான அன்பையும் பாசத்தையும் கொடுத்து எழில் ஒரு நல்ல கணவர் என்கிற முறையில் காதலை பரிமாறிக் கொள்கிறார். அத்துடன் உன்னையும் என்னையும் யாராலையும் பிரிக்க முடியாது தைரியமாக இரு என்று சொல்கிறார்.
அடுத்தபடியாக கோபி, ராதிகாவிடம் எழில் பிரச்சனையை நினைத்து ரொம்பவே கவலைப்பட்டு பேசுகிறார். அதற்கு ஈசியான முறையில் எல்லா பிரச்சனைக்கும் ராதிகா ஒரு தீர்வு கொடுக்கிறார். அதாவது இப்போ ராஜேஷ் வந்து என்னையும் மையு பாப்பாவையும் என்னோட அனுப்பிவை என்று கேட்டா, உடனே அனுப்பி வெச்சிடுவீங்களா என்று கேட்கிறார்.
Also read: வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் குணசேகரன் தங்கச்சி.. ஆடுபுலி ஆட்டம் ஆடும் அப்பத்தா
அதற்கு கோபி அது எப்படி முடியும் நாம்தான் பழைய வாழ்க்கையே மறந்து விட்டு புது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஆரம்பித்து விட்டோமே. இதுதான் நம்முடைய குடும்பம் என்று கோபி ராதிகாவிடம் சொல்கிறார். உடனே ராதிகாவும் இதே மாதிரி தான் எழில் அமிர்தாவும். அமிர்தா பழைய வாழ்க்கை மறந்து விட்டு எழிலுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
அப்படி இருக்கும் பொழுது திடீரென்று கணேசன் வந்து அனுப்பி வையுங்கள் என்று சொன்னால், அது எப்படி சாத்தியமாகும். அது சட்டப்படி தவறும் கூட தான். அதனால் எல்லாமே அமிர்தாவின் கையில் தான் இருக்கிறது. அமிர்தா எப்போதுமே நம்முடன் இருப்பதால் இந்த விஷயத்தை பெருசாக யோசிக்க வேண்டாம். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.
அதனால் இதை நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கோபிக்கு ஒரு தெளிவான பதிலை கூறுகிறார். இதனை தொடர்ந்து கோபியும் ராதிகாவும் பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஆறுதலாக தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்கள். அந்த வகையில் இனி அமிர்தா வாழ்க்கையில் கணேஷ் உள்ளே வராதபடி கூடிய விரைவில் பிரச்சனை முடிந்து விடும்.
Also read: 2023 ஆண்டின் சிறந்த சீரியலுக்கான விருதைப் பெற்ற இயக்குனர்.. சன் டிவி டிஆர்பி-யின் கிங்