Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கதையே இல்லாட்டாலும் பரவாயில்லை நான் நாடகத்தை முடிக்க மாட்டேன் என்று பாக்கியலட்சுமி சீரியல் கடந்த பல வருடமாக ஓடிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒரே டிராக்கை மறுபடியும் மறுபடியும் கொண்டு வருகிறார்கள். சூழ்ச்சி செய்து ராதிகாவை விட்டு கோபியை நிரந்தரமாக பிரித்து தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி, கோபியிடம் பிளான் பண்ணி சத்தியம் வாங்கினார்.
கோபியும் அம்மா கேட்ட சத்தியத்தை உடனே பண்ணி விட்டார். ஆனால் பாக்கியா, இந்த கோபியை இப்படியே விட்டு விட்டால் நம் தலையில் கட்டி விட்ருவாங்களோ என்ற பயத்தில் ராதிகாவிடம் பேசிப் பார்த்தார். ஆனால் ராதிகா எதற்கும் அசரவில்லை. அதனால் சுயபுத்தி இல்லாமல் தவித்து வரும் கோபி மூலமாக பாக்கியா காய் நகர்த்தி விட்டார்.
அந்த வகையில் கோபி மண்டையில் உரைக்கும் படி சில அட்வைஸ்களை சொல்லி ராதிகா வீட்டை விட்டு காலி பண்ணாமல் தடுக்க வேண்டும் என்று கோபியை அனுப்பி வைத்தார். ஆனால் கோபி போவதற்குள் ராதிகா வீட்டை காலி பண்ணியதால் வீட்டிற்கு திரும்பி வந்த கோபி, ராதிகா வீட்டை காலி பண்ணி போய்விட்டார் என்று சொல்கிறார்.
உடனே இதுதான் சான்ஸ் என்று ஈஸ்வரி, அவ கூட எல்லாம் மனுஷன் வாழ முடியுமா? விட்டுத்தொலை ராதிகா போனால் போகட்டும். இனியாவது நீ நிம்மதியாக இரு, அந்த ராதிகாவை பற்றி உனக்கு நினைப்பே தேவையில்லை என்று கொளுத்தி போட்டார். ஆனால் பாக்கியா, இதெல்லாம் பார்த்து சும்மா இருக்க முடியாது என்பதற்கு ஏற்ப எப்படியோ போகட்டும் என்று ராதிகாவை விட்டுவிட்டு நீங்கள் இப்படி இங்கு வந்து இருக்கக் கூடாது என்று ஆவேசமாக பேசுகிறார்.
இனியாவை இதே மாதிரி கல்யாணம் பண்ண மாப்பிள்ளை அம்மா பேச்சைக் கேட்டு இனியாவை விட்டுவிட்டு போயிட்டா அது உங்களுக்கு சரியாக இருக்குமா? என்று கோபி மூளைக்கு எட்டுற மாதிரி நல்ல நாலு கேள்வி நறுக்கு என்று கேட்டு விட்டார். உடனே ஆவேசப்பட்ட கோபி, ராதிகா புது வீட்டை கண்டுபிடித்து அங்கே போய் விடுகிறார். கோபியை பார்த்த சந்தோஷத்தில் மயு, டாடி என்று அரவணைப்பை தேடிக் கொள்கிறார்.
இன்னொரு பக்கம் கோபியை அனுப்பி வைத்ததற்கு ஈஸ்வரியையும் ஒட்டுமொத்த குடும்பமும் பாக்கியா மீது கோபப்பட்டு திட்டுகிறார்கள். அதற்கு பாக்கியா, அவரு பொண்டாட்டி பிள்ளையுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று போயிருக்கிறார். இதுல நீங்கள் இவ்வளவு டென்ஷன் ஆகி பேச வேண்டிய அவசியமே இல்லை என்று பாக்கியா, ஈஸ்வரி புத்திக்கு உரைக்கும் படி சொல்கிறார்.
ஆனாலும் எதற்கும் அசராத ஈஸ்வரி, திரும்ப வருவான், இப்ப வந்துருவான், அவனுக்கு ராதிகா விட நான் தான் முக்கியம் என்று பாக்யாவிடம் வீரவசனமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி சொன்ன மாதிரி கோபியும் பாக்கியா வீட்டு வாசலுக்கு வந்து விடுகிறார். உடனே சந்தோஷத்தில் ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா அனைவரும் வாசலில் வரவேற்க போய் விட்டார்கள்.
ஆனால் அங்கே தான் இவர்கள் மூன்று பேருக்கும் ஆப்பு இருக்கிறது என்பதற்கு ஏற்ப, கோபி ஈஸ்வரியை பார்த்து அம்மா நீ சொன்ன மாதிரி நான் உன் கூட இருக்கவே மறுபடியும் வந்து விட்டேன் என்று சொல்லி ராதிகா மற்றும் மயூவையும் கூட்டிட்டு வந்து விட்டார். இதை எதிர்பார்க்காத அவர்கள் மூன்று பேரும் மூஞ்சில் ஈ ஆடவில்லை. அந்த அளவிற்கு ஆட்டம் கழண்டு போய் நிற்கிறார்கள்.
இந்த மாதிரி விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாலும் தற்போது கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக ஈஸ்வரி போட்ட ஆட்டத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாக கோபி சரியான முடிவு எடுத்திருக்கிறார். அந்த வகையில் இனி ஆசைக்கு ராதிகாவும், ஆரோக்கியத்திற்கு பாக்கியாவும் வாழ்ந்து ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என இனி கோபி லூட்டி அடிக்க தயாராகிவிட்டார்.